2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராஜா  தலைமையில் வழமை போன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது, நேற்று (27) நடைபெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில், அறப் போரில் ஆகுதியாகிய வீர மறவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முதற்சுடரை  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில், யாழ். மாநகர சபை மேயர் இமானுவல் ஆர்னோல்ட்,   வடக்கு மாகாண அவைத் தலைவர்  சி.வி.கே சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X