2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

'65,000 வீடுகளை நிர்மாணிக்க வட மாகாண சபை அனுமதியை பெறவேண்டும்'

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்த பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், அதுவரையில் அந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோருகின்ற அவசர பிரேரணையொன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக இன்று வியாழக்கிழமை (24) தொலைநகல் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவைத்தலைவர் கூறினார்.

தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்படும் இந்த வீடுகள் வடமாகாணத்துக்கு பொருத்தமில்லாத வீடுகள் என வடமாகாண சபை இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .