2021 மார்ச் 01, திங்கட்கிழமை

விடுமுறையில் சென்ற சிவாஜிலிங்கம் அவைக்கு வந்தால் குழப்பம்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

சுவிஸ் நாட்டுக்குச் செல்வதற்காக வடமாகாண சபையில் விடுமுறை கேட்டிருந்த உறுப்பினர்  எம்.கே.சிவாஜிலிங்கம், நேற்று செவ்வாய்க்கிழமை (25) திடீரென சமூகமளித்தமையால் அவையில் குழப்பம் ஏற்பட்டது.

சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சுவிஸ் நாட்டுக்குச் செல்வதாகக்கூறி விடுமுறை பெற்றுக்கொண்டதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அவை ஆரம்பிக்கும் போது கூறினார்.

ஆனால் அத்தருணத்தில் சிவாஜிலிங்கம் அங்கு பிரசன்னமாகியிருந்ததுடன், சில கருத்துக்களையும் தெரிவித்தார்.

விடுமுறை வழங்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் அவையில் தெரிவித்த கருத்துக்கள் எவ்வாறு கன்சாட்;டில் பதியமுடியும் என்ற குழப்பம் உள்ள நிலையில், இது தொடர்பில் அவைத்தலைவர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .