2021 மே 17, திங்கட்கிழமை

பஸ்ஸில் ஏறும் போது தவறி வீழ்ந்து மாணவன் பலி

Super User   / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி, தாஸ்)

யாழ். குறிகட்டுவான் பிரதேசத்தில் மாணவன் ஒருவன் பஸ்ஸில் ஏறும்பொழுது தவறி வீழ்ந்து பஸ் சில்லுக்குள் தலை சிக்குண்டதன் காரணமாக ஸ்தலத்திலேயே அம்மாணவன் பலியாகியுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்ற மாணவனான நல்லைநாதன் தனுசன் (வயது 13) அவ்விடத்தில் உயிரிழந்துள்ளார்.

நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவிலுக்கு நவராத்திரி பூஜையினையொட்டி யாழ் இந்து கல்லூரியிலிருந்து சுற்றுலா சென்ற ஒரு தொகுதி மாணவர்கள் கோவிலுக்கு சென்று விழிபாடுகளை முடித்து விட்டு வரும் போது குறிகட்டுவான் பிரதேசத்தில் பஸ்ஸில் ஏறும்பொழுது அவர் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊர்காவற்துறை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .