2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மழையினால் வசந்தபுரம் மக்கள் இடம்பெயர்வு

Super User   / 2011 நவம்பர் 27 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல முதல் பெய்து வரும் மழையினால் தாழ்நில பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பெரும் வெள்ள அபாயத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீளக்குடியேற்றப்பட்ட வசந்தபுரம் மக்களே இந்த வெள்ள அபாயத்திற்க்கு உள்ளாகி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான உதவிகளை வலி வடக்குப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகின்றது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மேலும் தாழ் நில பகுதிகளிலுள்ள  பொதுமக்களும் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்கு உள்ளாகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .