2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தில் 24 மணித்தியாலங்களுக்குள் துரித அஞ்சல் பரிமாற்ற சேவை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் கூடிய விரைவில் 24 மணிநேரத்திற்குள் அஞ்சல் பரிமாற்றக்கூடியவாறு விரைவான நவீனத்துவ சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  137ஆவது உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது. அஞ்சல் தினத்தை சிறப்பிக்கும் நோக்குடன் யாழ். பிராந்திய அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்துடன் அஞ்சல் சேவையும் இணைந்து பணியாற்றும் வகையில் யாழ்ப்பாணத்தில் அஞ்சல் சேவையுடன்  பல புதிய சேவைகளையும் தமது அஞ்சலகம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் அஞ்சல் சேவை மூலம் மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கி வருகின்றோம்.  எமது சேவையில் குறைகள் இருக்குமாயின் நேரில் வந்து முறையிடலாமெனவும் எஸ்.ஜெபரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--