2019 டிசெம்பர் 15, ஞாயிற்றுக்கிழமை

நல்லூரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய மூவர் கைது

எம். றொசாந்த்   / 2019 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்  நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 3 முஸ்லீம் இளைஞர்கள்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில், நேற்று (12) இரவு 10 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 3 முஸ்லீம் இளைஞர்கள் யாழ்ப்பாண  பொலிஸாரால்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 முஸ்லீம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில்  பகுதியை சேர்ந்தவர்கள்  எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .