2021 மே 06, வியாழக்கிழமை

முன்பள்ளி திறந்துவைப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மணல்குன்று பைதுஸ் சகாத் 20 வீட்டுத் திட்டத்தில்  'பாஸ் முன்பள்ளி' எனும் பெயரில் முன்பள்ளியொன்று நிர்மாணிக்கப்பட்டு ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்று  (24) வைபவ ரீதியாக மக்களிடம் கையளிக்கப்பட்டது.

சாஹிரா தேசிய கல்லூரியின் 2008 க.பொ.த சாதாரண தர மாணவர்களை கொண்ட அமைப்பான இந்த 'பாஸ்' அமைப்பினர்  2013 தொடக்கம் சமுக சேவைகளில் காத்திரமான பங்களிப்புதனை நல்கி வருகின்றனர். அதன் சிலாகிக்கத்தக்க சேவையாக இந்த பாஸ் முன்பள்ளியை குறிப்பிடலாம்.

இங்கு கிளினிக் மற்றும் சிறார்களுக்கான குர்ஆன் மத்ரஸா என்பனவும் நடத்தப்பட முடியும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .