2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

விமானநிலையம் சென்ற வான் விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயம்

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் கீரியங்கள்ளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து முந்தல் மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்த வான், வியாழக்கிழமை கீரியங்கள்ளிப் பகுதியில் பாதை விட்டு விலகி அருகில் இருந்த மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதியதுடன் வீட்டின் படலையையும் உடைத்துக் கொண்டு சென்றுள்ளது.

குறித்த வானில் பயணித்த ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அவர்களில் இருவர் மேலதிகச் சிகிச்சைக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .