2019 டிசெம்பர் 16, திங்கட்கிழமை

கவ்டுல்ல தேசிய பூங்காவில் பெரும் எண்ணிக்கையிலான யானைகள்

Editorial   / 2019 ஜூலை 19 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவ்டுல்ல தேசிய பூங்கா பகுதிகளில் 400க்கும் அதிகமான யானைகள் நடமாடுவதை தற்போது அவதானிக்க முடிவதாக கவ்டுல்ல தேசிய பூங்கா பொறுப்பதிகாரி பிரதீப் குமார எட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.

இந்த பூங்கா பகுதிக்கு மாலை நேரங்களில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதுடன் இந்த யானைகளின் வேடிக்கை செயற்பாடுகளை அவதானிப்பதற்காக இங்கு வருகை தரும் சுற்றுலாப்பயனிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் படிப்படியாக மேம்பட்டு வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .