2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

புதிய பஸ் சேவை ஆரம்பம்

Editorial   / 2019 ஜூலை 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம்-  ஆனமடுவ  பகுதியிலிருந்து,  மஹரகம  புற்றுநோய் வைத்தியசாலைக்கு பயணிப்பதற்காக, புதிய  பஸ் சேவையொன்று, இன்று (12) காலை  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின், சிலாபம் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸே இவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த பஸ் சேவையானது,  ஆனமடுவ, சிலாபம், கட்டுநாயக்க, மினுவாங்கொடை, நிட்டம்புவ ஊடாக மஹரகம  வைத்தியசாலை வரை பயணிக்கவுள்ளது.

இதன்படி, தினமும்ம,  காலை 6 மணிக்கு ஆனமடுவ நகரிலிருந்து புறப்படும் குறித்த பஸ், வைத்தியசாலையை வந்தடைந்ததன் பின்னர், பிற்பகல் 1.15 க்கு மஹரகம  வைத்தியசாலையில் இருந்து,  ஆனமடுவை நோக்கிப் புறப்படுமென, தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .