2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

வெலிகந்தையில் வீசிய பலத்த காற்றால் குடியிருப்புகளுக்குச் சேதம்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பொலன்னறுவை- வெலிகந்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகுல்பொக்குண, நாமல் கம ஆகிய கிராமங்களை ஊடறுத்து நேற்று (09) மாலை வீசிய பலத்த காற்றினால், பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

குறித்த இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 7 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் செல்லப்பட்டுள்ளதுடன்,  மகுல் பொக்குண உர களஞ்சியசாலையின் கூரையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே, இவ்வாறு காற்று பலமாக வீசியதாக, குறித்த கிராமங்களைச் சேர்ந்த  மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், 8 மாதங்களின் பின்னரே தமக்கு மழை கிடைக்கப்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலன்னறுவை பகுதிகளில், நேற்று  (09) மழை பெய்த போது, வானில் இருந்து ஐஸ் கட்டிகள் விழுந்ததை தாம் அவதானித்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .