2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

'கோ-கார்ட்' ரக பந்தைய கார்களுக்கு மாத்திரமே வரி குறைப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் முன்மொழிவுகளை தொடர்ந்து, பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த விடயமாக மோட்டார் கார் பந்தையங்களுக்கு பயன்படுத்தப்படும் கார் வகைகளை இறக்குமதி செய்வதற்கான வரி குறைக்கப்படும் என்பது அமைந்திருந்தது.

இந்த விடயம் வரவு - செலவு திட்டம் மீது நாடாளுமன்றத்தில் தொடர்ந்த விவாதங்களின் போதும் எதிர்தரப்பினர் தமது விமர்சனங்களையும், மாற்று கருத்துக்களையும் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வரிக்குறைப்பானது 'கோ-கார்ட்' வகையை சேர்ந்த கார்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே வரி குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவற்றுக்கு அல்ல எனவும் நேற்றைய தினம் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வரி குறைப்புக்கு பிரதான காரணியாக சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசு சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன் லம்போர்கினி போன்ற உயர் சொகுசு கார் வகைகளின் வரிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .