2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கல்வி அமைச்சுடன் - ஒராக்கிள் நிறுவனம் கைகோர்ப்பு

A.P.Mathan   / 2012 நவம்பர் 21 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் 1000 இரண்டாம் நிலை பாடசாலைகளில் கணினி பொறிமுறை கற்கைகளை வழங்கும் முகமாக, இலங்கை கல்வி அமைச்சு, ஒராக்கிள் கோர்ப்பரேஷன் சிங்கப்பூர் பிரிஈ லிமிடெட் நிறுவனத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் மூலம், ஒராக்கிள் அக்கடமியின் Java Fundamentals curriculum மற்றும் 'Getting Started with Java Using Alice' போன்ற பயிற்சிப்பட்டறைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம் கல்வி அமைச்சுக்கு இலங்கையின் இரண்டாம் நிலை பாடசாலைகளை சேர்ந்த சுமார் 25000 மாணவர்களையும், 1000 ஆசிரியர்களையும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தயார்ப்படுத்த முடிவதுடன், எதிர்காலத்தில் சிறந்த தகைமையுடைய ஊழியர்களையும் தயார்ப்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒராக்கிள் அக்கடமி தனது புதிய ஜாவா கற்கைளை இவ்வருடத்தின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தியிருந்தது. ஜாவா என்பது உலகின் பல பாகங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படும் கணினி கட்டமைப்பாகும். 9 மில்லியனுக்கும் அதிகமான மென்பொருள் வடிவமைப்பாளர்கள்pன் மூலம் 3 பில்லியனுக்கும் அதிகமான உபகரணங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒராக்கிள் அக்கடமியின் மூலம் 97 நாடுகளைச்சேர்ந்த 1.9 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு அனுகூலங்கள் வழங்கப்பட்ட வண்ணமுள்ளது.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் அறிவுக்கான கல்வி திட்டத்தின் பணிப்பாளருமான அநுர ஏக்கநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் நேரடி வழிகாட்டலின் கீழ் இலங்கையில் தொழில்நுட்பசார் கல்வி நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் தொழில்நுட்ப அறிவு வாய்ந்த தொழில்சார் தலைமுறையை உருவாக்க முடியுமென நாம் கருதுகிறோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .