2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

தனது புதிய விற்பனையகத்துக்கு வாடிக்கையாளர்களை வரவேற்கும் கிரெசன்ட் ஃபுட்ஸ்

A.P.Mathan   / 2013 ஜூலை 29 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


நோர்போல்க் ஃபுட்ஸ் (பிரைவேற்) லிமிடெட், தனது புதிய உணவு விற்பனையகத்தை இல. 16, செல்லமுத்து ஒழுங்கை, கொழும்பு 3 (மெரின் டிரைவ் வீதிக்கு முகப்பாக) எனும் முகவரியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. நவீன முறையில் அமைந்த உள்ளக மற்றும் வெளிக்கள வடிவமைப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான முறையில் தமது கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த விற்பனையகத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி தயாரிப்புகளையும் அனைத்து இறைச்சி தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதிகளையும் வழங்கவுள்ளது.
 
பல்வேறு தெரிவுகளுக்கு மேலதிகமாக, இந்த விற்பனையகத்தின் வெளியக மற்றும் உள்ளக வடிவமைப்பு சர்வதேச தரம் வாய்ந்த பொருத்தல்கள் கொண்டு அமைந்துள்ளமையின் காரணமாக வாடிக்கையாளருக்கு முன்னொருபோதும் இலங்கையில் கிடைத்திராத அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது. அத்துடன். இலங்கையில் காணப்படும் உறைய வைக்கப்பட்ட இறைச்சி விற்பனை நிலையங்களில் அதிநவீன வசதிகளை கொண்டதாக இந்த விற்பனையகம் அமைந்துள்ளது.
 
நோர்போல்க் ஃபுட்ஸ் (பிரைவேற்) லிமிடெட்டின் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் அமீனா மொஹமட் கருத்து தெரிவிக்கையில், 'நாம் எப்போதும் முயற்சி செய்வது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தன்னிறைவை வழங்குவதற்காகும். எமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறந்தவற்றை கொடுப்பதே எமது நோக்கம். இந்த புதிய விற்பனையகம், எமது அனைத்து தயாரிப்புகளையும் ஒரே கூரையின் கீழ் விற்பனை செய்யும் நிலையமாக அமைந்துள்ளது. இந்த அனைத்து தயாரிப்புகளும் உயர் தரங்களுக்கு அமைவாக தயாரிக்கப்படுகின்றன. எமது நோக்கம், வாடிக்கையாளர்களுக்கு தாம் அவர்களின் வீட்டில் இருப்பதை போன்ற ஒரு உணர்வை வழங்குவதாகும்' என்றார். 
 
கிரெசன்ட் ஃபைன் புட்ஸ் என்பது Breaded Range, Cold Cuts, Savoury Range, Italian Range, Smoked Delicacies, Customised Specialties, Sausage மற்றும் Breakfast Grills, Burgers மற்றும் Meatballs மற்றும் Kebabs, Satay மற்றும் Yakitori போன்ற பல்வேறு வகையான தயாரிப்புகளின் தாயகமாக திகழ்கிறது. இவை ஒவ்வொரு பிரிவும் உங்களுக்கு சிறந்த சுவையான அனுபவத்தை வழங்குவதுடன், உறைய வைக்கப்படுவதன் மூலமான அனுகூலத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளன. 
 
கிரெசன்ட் தயாரிப்புகளில் Mini Kievs, Kochchi Bites, Cheese மற்றும் Onion Sausages, Chicken Drummers மற்றும் Fish Fingers போன்றன பிரபல்யம் பெற்ற தயாரிப்புகளாக திகழ்கின்றன. மேலும் கிரெசன்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உறைய வைக்கப்பட்ட கோழி இறைச்சியும் வழங்கப்படுகிறது.
 
'எம்மிடம் 150க்கும் அதிகமான தயாரிப்புகள் விற்பனைக்குள்ளன. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் சந்தையில் பிரசன்னத்தை கொண்டுள்ளோம். ஆயினும், சில்லறை வியாபாரத்துறையில் எமது சில குறிப்பிட்ட தயாரிப்புகள் மட்டுமே அதிகளவில் விற்பனையாகின்றன. இந்த விற்பனையகத்தின் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு எம்மிடமுள்ள முழுமையான தெரிவுகளையும் கொள்வனவு செய்வதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விசேடமாக ஹோட்டல்களுக்கும், ரெஸ்டோரன்ட்களுக்கும், உணவகங்களுக்கும் விநியோக்கிக்கப்படும் தயாரிப்புகள் கூட இந்த விற்பனையகத்தில் சில்லறை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன' என அமீனா மொஹமட் மேலும் தெரிவித்திருந்தார்.
 
Kebabs, Smoked Meats, Southern Fried Chicken, Corden Bleu போன்ற தயாரிப்புகளை தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலம் மொத்தமாக ஓடர் செய்து எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம். 
 
'எமது எதிர்கால திட்டங்கள் பரந்துபட்டவை. இந்த கொள்கையை மேலும் பல விற்பனையகங்களுக்கு விஸ்தரிப்பு செய்ய வேண்டிய தேவை எமக்குள்ளது. வெகு விரைவில் தொலைபேசி மூலம் மேற்கொள்ளப்படும் ஓடர்களுக்கு விநியோக சேவையையும் நாம் அறிமுகம் செய்யவுள்ளோம். அத்துடன், மேலும் பல புதிய தயாரிப்புகளையும் உள்ளடக்க தீர்மானித்துள்ளோம்' என அமீனா மொஹமட் குறிப்பிட்டார்.
 
உறைய வைக்கப்பட்ட உணவு வகைகளுக்கு மேலதிகமாக, கிரெசன்ட் ஃபைன் புட்ஸ் உடன் இணைந்த  பாண் பாண் விற்பனை நிலையத்தையும் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்களை தெரிவு செய்யும் அதேவேளை, சுவையான மஃபின்கள், உறைப்பான உண்டிகள், பாண் வகைகள் போன்றவற்றை உடனடியாக விருப்பத்தெரிவுக்கமைய சுவைத்து மகிழக்கூடிய வகையில். இந்த நிலையம் அமைந்துள்ளது.  
 
வாடிக்கையாளர்களுக்கு தமது பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வகையில் போயா விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் மு.ப. 8 மணி முதல் பி.ப. 8 மணி வரை திறந்திருக்கும். விற்பனையகத்தின் முகாமையாளர் ஹிஷாம் அவர்களை 0772940139 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ளவும் முடியும். விற்பனையகத்தின் இணையத்தளமான www.norfolk.lk மற்றும் பேஷ்புக் பக்கமான www.facebook.com/NorfolkFoods ஆகியவற்றை பார்வையிடுவதன் மூலம் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
 
நோர்போல்க் ஃபுட்ஸ் (பிரைவேற்) லிமிடெட் (NFPL) என்பது எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் 1992ஆம் நிறுவப்பட்டிருந்ததுடன், 'கிரெசன்ட்' வர்த்தக நாமத்தில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்வதற்காக புகழ்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--