2019 ஒக்டோபர் 16, புதன்கிழமை

அலியான்ஸில் புதிய நிறைவேற்று அதிகாரி கணி

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிடட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிடட் ஆகிய நிறுவனங்களுக்கு பிரதான நிறைவேற்று அதிகாரியாக கணி சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக அலியான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அலியான்ஸ் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக பொறுப்புகள், வணிகத்தின் வளர்ச்சி மூலோபாய விடயங்கள் இவரது பொறுப்பின் கீழ் செயற்படுத்தப்படுகின்றதென தெரிவிக்கப்படுகின்றது.

12 வருடங்களாக அலியான்ஸ் நிறுவனத்தின் வர்த்தக முன்னேற்றங்களுக்கு பெரும்பங்கு ஆற்றிய  சுரேகா அலஸ், நிறுவனத்திலிருந்து விலகும் நிலையில், ஜுன் 1ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கணி அப்பதவியில் தமது பொறுப்பக்களை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் அவர், அலியான்ஸ் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சொத்துக்கள் மற்றும் விபத்துக்களுக்கு பொறுப்பான பிரதம நிறைவேற்று அதிகாரி க்லோடியா சேலம் தலைமையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளார்.

சிங்கபூர் மற்றும் மலேஷியாவில் உள்ள AIG நிறுவனத்தில் சிரேஷ்ட பதவிகள் உள்ளடங்கலாக காப்புறுதி துறையில் 16 வருடங்களுக்கு அதிகமான அனுபவத்தை கணி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .