இளம்தொழில் முனைவோருக்கு திறன்வழிகாட்டும் பயிற்சிகளுக்கு நிதியுதவி

யு.எஸ் எயிட் நிதியில் இயங்கும் International Executive Service Corps நிறுவனம் இளம் தொழில்முனைவோர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணிபுரிந்து, தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவிவருவதுடன், இத்தகைய இளம் தொழில்முனைவோரிடையே நிதிச்சேவையில் ஈடுபடும் நிதிநிறுவனங்களின் கடன் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க உதவுகிறது.  

மேற்குறித்த இலக்கை அடையும் வகையில் RDB வங்கியும் அதிக நிதிச் சேவைகளை வழங்கி வருவதன் காரணமான International Executive Service Corps நிறுவனத்துடன் கைகோர்த்துப் பயணிக்கும் பொருட்டு, RDB வங்கியின் தலைவர் பிரசன்ன பிரேமரத்ன சமூகமளித்திருக்க அதன் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டி.ஏ. அரியபாலா, International Executive Service Corps நிறுவனத்தின் சார்பில் திட்ட அலுவலர் சார்லஸ் கொக்கோனி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

RDB தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பொது முகாமையாளர் (கடன்) சி.எல். பிஹில்லாந்த மற்றும் உதவிப் பொது முகாமையாளர் (கடன்) எல்.பி. உபாலி மற்றும் கடன் பிரிவிலிருந்து ஷெஹரா டி சில்வா, ஹர்ஷா டி அல்விஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.     


இளம்தொழில் முனைவோருக்கு திறன்வழிகாட்டும் பயிற்சிகளுக்கு நிதியுதவி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.