உலக சிறுவர் தினத்தையொட்டிசெலான் டிக்கிரியிடமிருந்து சலுகைகள்

 

26 வருட காலமாக சிறுவர் சேமிப்புக் கணக்கில், தனது சிறப்பான நிலையை பேணி வரும் செலான் வங்கி, செலான் டிக்கிரி கணக்குடன் சிறுவர் மாதத்தை கொண்டாட முன்வந்துள்ளது. உலக சிறுவர் தினத்துடன், இந்தச் செயற்பாடுகள் 4ஆவது வருடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான பெருமளவான நிகழ்வுகளும் கவர்ச்சிகரமான பரிசுகள் போன்றனவும், நாடளாவிய ரீதியில் காணப்படும் வங்கியின் பரந்த கிளை வலையமைப்பினூடாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  

செலான் டிக்கிரி சிறுவர் மாதம் எனும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்த முதலாவதும் ஒரே வங்கியுமாக செலான் வங்கி திகழ்கிறது. ஒக்டோபர் மாதம் முழுவதும் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், பெருமளவு செயற்பாடுகள் உள்ளடங்கியிருக்கும். அத்துடன் செலான் டிக்கிரி கணக்கு வைத்திருப்போர் மத்தியில் பெருமளவு நினைவுகளை நிலைத்திருக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கும். இந்த ஆண்டு, நாட்டில் காணப்படும் 18க்கும் அதிகமான முன்னணி விற்பனை நிலையங்களுடன் கைகோர்த்து, விளையாட்டுப்பொருட்கள், சுகாதார பராமரிப்பு, சைக்கிள்கள், புத்தகங்கள், காகிதம் முதலிய எழுது பொருள்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றின் மீது 50சதவீதத்துக்கும் அதிகமான விலைக்கழிவை பெற்றுக்கொடுக்க வங்கி முன்வந்துள்ளது. 

டிக்கிரி கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது Mydoctor.lk, Lumala City, Farlin Pvt. Ltd, சால எண்டர்பிரைசஸ், பிரவுன்ஸ் மருத்துவமனை, Panther, DSI, சரசவி புத்தகக்கடை, நாவலோகா மருத்துவமனை, விஜித யாப்பா புக்‌ஷப், திலகவர்த்தன டெக்ஸ்டைல்ஸ், ஹர்கோர்ட்ஸ் பார்மசி, லங்கா ஹோஸபிட்டல், DSI BIke, சந்தீபா புக்‌ஷப், அமானா தக்காஃபுல், ரெய்ன்கோ மற்றும் Bata ஆகியவற்றில் அதிக சேமிப்புக்களை அனுபவிக்கலாம். இந்த விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ள, டிக்கிரி கணக்கு வைத்திருப்போர், குறித்த விற்பனை நிலையத்துக்குரிய கூப்பன்களை வங்கியிடமிருந்து பெற்று, அவற்றை விற்பனை நிலையங்களில் சமர்ப்பித்து, தாம் கொள்வனவு செய்யும் பொருட்கள் மீது விலைக்கழிவை பெறலாம். மேலும், டிக்கிரி கணக்கு வைத்திருப்போர், பிரத்தியேகமான அன்பளிப்புகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை பெறுவதுடன், 01.10.2017 முதல் 31.10.2017 காலப்பகுதியில் ஊக்குவிப்புத்திட்டம் நடைமுறையிலுள்ள வேளையில், டிக்கிரி கணக்கில் 1,500 ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையை வைப்புச் செய்யும் போது டிக்கிரி வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட டிஜிட்டல் கடிகாரமொன்றை மற்றும் விலைக்கழிவு கூப்பன் களையும் பெற்றுக்கொள்ளலாம். இது, தொகை கையிருப்பிலுள்ள வரை வழங்கப்படும். 

உலக சிறுவர் மாத கொண்டாட்டங்கள் பற்றி செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் பிரதானி திரு. காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக செலான் டிக்கிரி பெருமளவு அன்பளிப்புகள் மற்றும் ஊக்குவிப்புத்திட்டங்களை உலக சிறுவர் மாதத்துக்காக வழங்க முன்வந்துள்ளது. செலான் டிக்கிரி உலக சிறுவர் மாதம் வெறுமனே மகிழ்ச்சியையும் விறுவிறுப்பையும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படாமல், சிறுவர்களுக்கு ஏனைய சிறார்கள் மற்றும் குடும்பத்தாருடன் உறுதியான பிணைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது” என்றார்.   


உலக சிறுவர் தினத்தையொட்டிசெலான் டிக்கிரியிடமிருந்து சலுகைகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.