எடிசலாட் சமூக ஊடக தினம்

உலகளாவிய ரீதியில் வருடாந்த ஜுன் 30ஆம் திகதி சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்ட நிலையில், எடிசலாட் லங்கா, Neo@Ogilvy ஸ்ரீ லங்கா உடன் கைகோர்த்து சமூக ஊடக தினத்தை அண்மையில் அனுஷ்டித்திருந்தது. 

சமூக ஊடக மாநாட்டுடன் குறித்த தினத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்ததுடன், இதில் தனியார் மற்றும் அரச துறையைச் சேர்ந்த சமூக ஊடக நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில், நிகழ்வின் தொனிப்பொருளான “How to thrive in a World of Fragmented Media” என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

Neo@Ogilvy இன் டிஜிட்டல் மூலோபாய ஆலோசகர் மேரியன் ஸ்டீவன்ஸ் தனது உரையில், கருமையான சமூக ஊடகம் மற்றும் காணப்படும் நாளிகைகளினூடாக நபர் ஒருவர் எவ்வாறான அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். விஜய நியுஸ்பேப்பர்ஸ் டிஜிட்டல் ஊடக பிரிவின் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உமைர் வொலிட் தனது உரையில், சமூக ஊடக வலைத்தளங்களில் வழங்கப்படும் பாதகமான பிரசாரங்கள் உண்மையில் பாதகமானவையா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தார். அணு வலு சபையின் பணிப்பாளர் சானுக வத்தேகம ஒன்லைன் ஊடகவியல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் அதில் காணப்படும் நேர்த்தியான மற்றும் பாதகமான விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். 

எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யார்தவ் மதியபரனன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ரெஹான் அல்மேதா மற்றும் Neo@Ogilvy டிஜிட்டல் ஊடகம் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் பிரிவின் தலைமை அதிகாரி அமித அமரசிங்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தனர். இதன் போது, வர்த்தக நாமங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் இடர் நிலைகளின் போது, இந்த வசதிகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இந்த கலந்துரையாடலை பிரசன்னா பத்மநாதன் கண்காணிப்பு செய்திருந்தார்.  


எடிசலாட் சமூக ஊடக தினம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.