எடிசலாட் cliQ இல் 100,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் இணைவு

 

எடிசலாட்டினால் வழங்கப்படும் cliQ இனால் முற்கொடுப்பனவு மொபைல் பாவனையாளர்கள் டேடாவை அனுபவிக்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்தச் சேவையில்,  இதுவரையில் 100,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் இணைந்துள்ளதாக, எடிசலாட் அறிவித்துள்ளது.  

எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யார்தவ் மதியபரணம் கருத்துத் தெரிவிக்கையில், “கால அடிப்படையில் டேடா பயன்படுத்தப்படும் Appஆன cliQ, நுகர்வோர்கள் அ​ைலபேசி  டேடாவை பயன்படுத்தும் முறையை மாற்றியமைத்துள்ளது. பாவனையாளருக்கு நட்புறவான app வடிவமைப்பு,  வாடிக்கையாளர்களுக்குக் காணப்படும் செயற்பாடுகளால்,  பெருமளவு பயனைப் பெற்றுக்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில்,  100,000 தரவிறக்கங்களைப் பதிவு செய்துள்ளது. டேடா பாவனையாளர்கள் மத்தியில் cliQ அதிகளவு பிரபல்யம் பெற்றுள்ளது” என்றார்.  எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கு, இணையத்துடன் இணைந்து கொள்ள, வேகமான, இலகுவான முறையாக cliQ அமைந்துள்ளது. 5 நிமிடங்கள் அல்லது 2 மணித்தியாலங்கள் வரை,  எந்தவொரு காலப்பகுதிக்குமான திட்டத்தை பாவனையாளர்கள் தெரிவு செய்து கொள்ளலாம். இந்த appஐ Google Play Store இலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். எடிசலாட் முற்கொடுப்பனவு இணைப்புடன் பயன்படுத்திக் கொள்ளலாம். 


எடிசலாட் cliQ இல் 100,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் இணைவு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.