ஒன்லைன் நிகழ்நிலைஏல விற்பனை தளம் அறிமுகம்

 

நாட்டின் நிகழ்நிலை ஏலவிற்பனை தளமாக (live auction site), தமது பிரத்தியேக ஏலவிற்பனை இணையத்தளமான www.shopandselllanka.lk ஐ Schokman & Samerawickreme நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல், இந்தத் தளம் செயற்படவுள்ளதுடன், இலங்கையின் ஏலவிற்பனைத் துறைக்கு நிஜமான புரட்சியைத் தோற்றுவிக்கும். இதன் ஊடாக வாடிக்கையாளர்கள் மோட்டார் வாகனங்கள், தளபாடங்கள், அரும்பொருட்கள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள் முதல் ஆதனமனைகள் வரை நிகழ்நேரத்திலேயே (live real time) ஏலத்தை கோர முடியும். 

“இந்த வர்த்தகமானது, எமது பாட்டனார் மற்றும் திரு. ஷொக்மன் ஆகியோருக்கிடையில் விளங்கிய, ஏலவிற்பனை மீதான பொதுவான ஈர்ப்பு மற்றும் ஆர்வம் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளமையால், இலங்கையின் ஏலவிற்பனைத்துறையின் அடித்தளமாக விளங்குகின்றது” என முகாமைத்துவ பணிப்பாளர் நவிந்த சமரவிக்கிரம தெரிவித்தார். “இது வெறுமனே ஒரு ஏலவிற்பனை மாத்திரமல்ல, நம்பிக்கை, உயர் தரம் மற்றும் வலுவான உறவு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட வர்த்தகமாகும்” எனத் தெரிவித்த எட்வின், அவர்களின் மகன்களான லொயிட், டெரிக் மற்றும் கார்ல் ஆகியோர், தமது வணிக நடவடிக்கைகளை தலைமையகம் உள்ள கண்டியில் இருந்து, கொழும்புக்கு விஸ்தரித்தல் குறித்த தமது நோக்கத்தினையும் வலியுறுத்தினர். ஷேர்லி சமரவிக்கிரம இதற்கான தொலைநோக்கினைக் கொண்டிருந்தார் என நினைவுறுத்திய நவிந்த, “எமது தந்தையார் மாஸ்டர் ஏலவிற்பனையாளராக விளங்கினார். 1955ஆம் ஆண்டு, இந்த வணிகத்துக்குள்  நுழைந்தது முதல், இந்த வணிக முனைப்பில் கழித்த அவரின் அரைநூற்றாண்டுகளும், இந்த வர்த்தகமானது, மேலும் புவியியல் ரீதியிலான அணுக்கத்தினை கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்தார்” என அவர் சுட்டிக்காட்டினார்.  

இந்த ஏலவிற்பனையகமானது, கொழும்பு 05இல், சிறப்பு நிலை ஏலவிற்பனை வசதியை தரும் நிலையத்தையும் இணைத்துள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள், தமது விருப்பத்துக்கேற்றவாறு, பொருட்களை கொள்வனவு செய்யமுடியும் அல்லது ஏலவிற்பனையில் இணைந்துகொள்ள முடியும். இந்த மரபுரிமைக்கு உணரக்கூடியதொரு திறனுண்டு. இது தரம். தொழிலில் நிபுணத்துவம், நெறிமுறைகள், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை, தனிப்பயனாக்கப்பட்டச் சேவை ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது. இதன் ஊடாகவே இந்நிறுவனமானது, தென் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தில், ஏலவிற்பனை, மதிப்பீடு, ஆதனமனை தரகுச்சேவை ஆகியவற்றுக்கான ISO சான்றை பெற்ற முதன்மை நிறுவனமாக திகழ்கின்றது. இது மட்டுமன்றி சர்வதேச ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட ஆதன மனை நிறுவனங்களான Savills Australia மற்றும் Cushman & Wakefield ஆகியவற்றுடன் பங்குடைமையையும் பேணுகின்றது.   

 


ஒன்லைன் நிகழ்நிலைஏல விற்பனை தளம் அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.