கண்டியில் Quantum கிளை

இலங்கையில் தரமான உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கும் Quantum Fitness, கண்டியில் தனது நான்காவது கிளையைத் திறந்துள்ளது. இந்தத் திறப்பு விழா, Quantum Fitness இன் தலைவர் நோமல் விஜயரத்ன, தலைமை நிறைவேற்று அதிகாரியான சந்திம உடபகே, இயக்குநர் கலாநிதி பி. எல். சுரேன் பீட்டர் மற்றும் உதவிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) துஷார குமாரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.  

இந்தத் திறப்பு விழாவின் போது, நிறுவனத்தின் தலைவர்  நோமல் விஜயரத்ன உரையாற்றுகையில், “Quantum Fitness ஆரம்பம் முதல், இலங்கையில் ஆரோக்கிய மற்றும் உடற்பயிற்சித் துறையில் ஒரு முக்கிய பங்கை வகித்து வருகின்றது. நாடு முழுவதுமான விநியோகத்துடன், வீடு மற்றும் பொது உடற்பயிற்சி உபகரணங்களுக்கான முதன்மையான விநியோகஸ்தராக நாம் அங்கிகரிக்கப்பட்டுள்ளோம்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் வாழும் மக்களுக்கு, எமது தரமான சேவைகளை வழங்கும் முகமாகவும் விற்பனைக்குப் பின்னரான சேவைகளை பெற்றுக்கொள்ளும் இடமாகவும் கண்டி பிரதேசத்தில் நிறுவப்பட்ட இந்தப் புதிய கிளை காணப்படும்” என்று குறிப்பிட்டார்.   

கார்டியோ, ஸ் டென்த் டிரெயினிங், அப்டொமினல் உள்ளடங்கலாக, ஏனைய உபகரணங்களை உள்ளடக்கிய இந்தப் புதிய Quantum Fitness கண்டிக் கிளை காட்சியறையில், முழுமையான உடற்பயிற்சி உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கண்டி சிட்டி சென்டருக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள இந்தக் கிளைக் காட்சியறை, கண்டி நகரத்தில் அமைந்துள்ள வீடுகள், ஹோட்டல்கள், பாடசாலைகள் மற்றும் உடற்பயிற்சிக்கூடங்கள் போன்றவற்றுக்கும்  சூழவுள்ள நகரங்களுக்கும் தனது சேவையை வழங்கும்.    


கண்டியில் Quantum கிளை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.