கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்க்கும் Prestige Automobile

இலங்கையில் BMW மற்றும் Hyundai  வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக விநியோகஸ்தர்களாகத் திகழும் Prestige Automobile Pvt. Ltd, கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்து, வாடிக்கையாளர்களின் கனவு வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்காக விசேட லீசிங் திட்டங்களை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் பெருமளவான விலைக்கழிவுகள் மற்றும் நெகிழ்ச்சியான மீளக் கொடுப்பனவு திட்டங்கள் போன்றன காணப்படுகின்றன.   

இந்த ஊக்குவிப்புத் திட்டத்துடன், வாடிக்கையாளர்கள் தற்போது தமக்குப் பிடித்த BMW  அல்லது Hyundai ரக கார்கள், SUV கள் மற்றும் சொகுசான செடான்கள் ஆகியவற்றை போட்டிகரமான விலையில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், இலகு தவணைக் கொடுப்பனவுகளையும் இதரபல அனுகூலங்களையும் கொமர்ஷல் வங்கி லீசிங் திட்டத்தினூடாக அனுபவிக்க முடியும்.  

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரை வழங்கப்படும் இந்தச் சலுகைத் திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களுக்கு BMW வாகனங்கள் மீது 50,000 ரூபாய் வரையான விலைக்கழிவையும் பரந்தளவு Hyundai வாகனத் தெரிவுகளில் 700,000 ரூபாய் வரையான விலைக்கழிவையும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், மீள் கொடுப்பனவுத் திட்டத்தை வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் ஐந்து ஆண்டுகள் வரை மீளமைத்துக் கொள்ளலாம்.  

இந்தப் பங்காண்மை தொடர்பில், Prestige Automobile பிரைவட் லிமிட்டெட் தலைவர் ஹெய்ன்ஸ் ரொய்டர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பங்காண்மை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைல் கல்லைக் கொண்டுள்ளதுடன், Prestige Automobile ஐச் சேர்ந்த நாம், எப்போதும் எமது சேவைகள் ஊடாகப் பெறுமதியை ஏற்படுத்துவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்தப் பங்காண்மை ஊடாக, எம்மால் தரமான வாகனங்களை வழங்க முடிந்துள்ளது மாத்திரமின்றி, வாடிக்கையாளர்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய லீசிங் திட்டங்களைத் தெரிவு செய்யக்கூடிய வசதியையும் வழங்கும். இதனூடாக அவர்களுக்கு, தமக்குப் பிடித்த வாகனங்களைப் பாரிய மாதாந்த வாடகை கட்டணங்களின்றிப் பிடித்த வாகனத்தைக் கொள்வனவு செய்ய முடியும்” என்றார்.  

இந்த விசேட லீசிங் ஊக்குவிப்புத் திட்டம் Prestige Automobile பிரைவட் லிமிட்டெட்டில் காணப்படும் BMW மாதிரிகளான 225xe, 218i, 530e, BMWi3, X1, X2, X5 களுக்கு பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. மேலும் Hyundai, Eon, Hyundai Grand I 10, Hyundai Creta, revolutionary IONIQ Hybrid வாகனங்களுக்கும் பொருந்தும்.   
BMW கார்களைப் பொறுத்தமட்டில், Prestige Automobile இனால் இரண்டு வருட கால வரையறைகளற்ற தூர ஓட்ட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. Hyundai கொள்வனவாளர்களுக்கு முதல் கார் சேவை இலவசமாக வழங்கப்படுவதுடன், 2வது சேவை ஊழியர்களுக்கான கட்டணம் அறவிடப்படமாட்டாது. மேலும், மூன்று வருட அல்லது 100,000 கிலோமீற்றர்கள் வரையான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.  

கொமர்ஷல் வங்கியின் நாடளாவிய ரீதியில் காணப்படும் கிளை வலையமைப்பிலிருந்து கிடைக்கும் லீசிங் செயன்முறைக்கு மேலாக, வங்கியால் தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் விசேட ஊக்குவிப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றினூடாக பூஜ்ஜிய சதவீத தவணைக்கட்டணத் திட்டம் மற்றும் காப்புறுதித் தவணைக்கட்டணங்களுக்கு கடன் அட்டை கொடுப்பனவுகள் ஏற்றுக் கொள்ளல் போன்றன வழங்கப்படுகின்றன.  

Prestige Automobile குழுமம் இலங்கையில் உலகப் புகழ்பெற்ற வாகன வர்த்தக நாமங்களை 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் வழங்கி வருகிறது. BMW, BMWi மற்றும் iPerformance வாகனங்களுக்கு இலங்கையில் ஏக அங்கிகாரம் பெற்ற முகவராகத் திகழும் Prestige Automobile இனால் BMW சர்வதேச மட்டத்தில் பேணும் நியமங்களைத் தொடர்ந்து பேணி வருகிறது. 

வாடிக்கையாளர்களுக்குச் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நாம மற்றும் உயர் விற்பனைக்குப் பிந்திய சேவைகள் போன்றவற்றை BMW-சான்றளிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டு வழங்குகிறது.  

இலங்கையில் Hyundai வர்த்தக நாம வாகனங்களின் விநியோகஸ்தராக Hyundai லங்கா பிரைவட் லிமிட்டெட் திகழ்கிறது. 1999 ஜூன் முதலாம் திகதி நிறுவனம் நிறுவப்பட்டது. Hyundai வர்த்தக நாமம் கொரியாவின் பெருமைக்குரிய நாமமாகக் கருதப்படுவதுடன், அதன் மோட்டார் வாகனங்கள் நீடித்த உழைப்பு, கடின பாவனை, சிறந்த உள்ளம்சங்கள் போன்றவற்றைக் கொண்டுள்ளதுடன், செலுத்தும் பணத்துக்கு உயர் பெறுமதியையும் சேர்க்கிறது.  


கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்க்கும் Prestige Automobile

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.