சம்பத் வங்கியின் ‘ஐந்தாம் தர புலமைப்பரிசில்’ கருத்தரங்குகள்

தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் சம்பத் வங்கி தனது ‘ஐந்தாம் தரப் புலமைப்பரிசில்’ தொடர் கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தம்மைத் தயார்ப்படுத்துவதற்கு வழிகாட்டி உதவும் முகமாக, இத்தொடரின் முதலாவது கருத்தரங்கு அண்மையில் மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டங்களில் அனுராதபுரம் சுவர்ணபாலி பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற கருத்தரங்கில் 1,200 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், எம்பிலிப்பிட்டிய டீ. ஏ. ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கில் 1,300 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்குபற்றி பயனடைந்துள்ளனர். இத்தொடரின் நான்காவது கருத்தரங்கு, பதுளை மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளதுடன், இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  

தமது பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பானதாக அமைவதற்காக பெற்றோர் தமது வாழ்வைத் தியாகம் செய்கின்றனர். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது மாணவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.  

 சம்பத் வங்கி மகரகமவில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். பிரபல ஆசிரியரான சரத் ஆனந்த இக்கருத்தரங்கை நடாத்தியதுடன், மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.  

பரீட்சை நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பில் தேவையற்ற மனப்பயங்களைப் போக்கும் வகையில், சரத் அலவத்துர நடாத்திய பயிற்சி வழிகாட்டல் மற்றும் தயார்படுத்தல் அறிவுரைகளுக்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடமிருந்து பலத்த வரவேற்புக் கிட்டியிருந்தது.   

வசதிகள் குறைந்த பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள், தேசிய பாடசாலைகளில் இணைந்து தமது கல்வியை முன்னெடுப்பதற்கான ஒரு நுழைவாயிலாகத் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அமைந்துள்ளது.   

இந்நாட்டில் உள்ள சிறுவர்களை, நாட்டின் எதிர்காலத்தை வழிநடாத்திச் செல்லும் பொறுப்பை கையிலெடுக்கும் திறமை கொண்டவர்களாக வளர்த்து, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சம்பத் வங்கி ‘ஐந்தாம் தர புலமைப்பரிசில்’ கருத்தரங்கை முன்னெடுத்து வருகின்றது.   


சம்பத் வங்கியின் ‘ஐந்தாம் தர புலமைப்பரிசில்’ கருத்தரங்குகள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.