சிலாபத்தில் செலிங்கோ லைஃவ் கிளை

சுற்றாடலுக்கு இசைவான புதிய பசுமைக் கிளை ஒன்றை செலிங்கோ லைஃவ் சிலாபத்தில் திறந்து வைத்துள்ளது.  
6000 சதுர அடிகளைக் கொண்ட இந்த இரண்டு மாடிக் கட்டடம் இலக்கம் 90A குருநாகல் வீதி, சிலாபம் என்ற முகவரியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. நிறுவனத்தின் 30 ஆவது ஆண்டு பூர்த்தியைக் குறிக்கும் வகையில் இது திறந்து வைக்கப்பட்டது. கம்பனியின் சொந்தக் காணியில் இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  


இயற்கை ஒளியை ஆகக் கூடுதலாகப் பயன்படுத்தும் வகையில் முழுமையாக சூரிய சக்தியைக் கொண்டு 20kW மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய வகையிலான வசதிகள் இங்கு அமையப் பெற்றுள்ளன. இந்தக் கட்டட நிர்மாணத்துக்கான மரப் பாவனையும் மிகக் குறைவானதாகவே அமைந்துள்ளது. மிக நவீன சக்தி ஆற்றல் கொண்ட ஒளி அமைப்பு, குளிரூட்டல் முறை என்பனவும் இதில் அடங்கும். மழை நீர் சேமிப்பு மற்றும் வாகனத்தரிப்பிட வசதி என்பனவும் இங்குள்ளன. செலிங்கோ லைஃவ்பின் பசுமையை நோக்கிய திட்டத்தின் கீழ் இந்தக் கட்டட நிர்மாணத்தின் போது அந்தக் காணியில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டன.  
கிளை செயற்பாட்டு மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு அப்பால் அருகிலுள்ள செலிங்கோ கிளைகளும் பாவிக்கக் கூடிய வகையிலான பயிற்சி நிலைய வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.  
கம்பனியின் நிலைபேறு சக்தி வள மாதிரிகளுக்கு இசைவாக நிர்மாணிக்கப்பட்ட கிளைக் கட்டடங்கள் ஹொரண, பாணந்துறை, வென்னப்புவ, பண்டாரவளை ஆகிய இடங்களிலும் உள்ளன. இது தவிர கம்பனி அநுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. கண்டி, களுத்துறை, குருநாகல், கம்பஹா, காலி, மாத்தறை, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொட்டாஞ்சேனை, கல்கிஸ்ஸ ஆகிய இடங்களில் தனது சொந்தக் கட்டடங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் பல சூரிய சக்தி முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.    


சிலாபத்தில் செலிங்கோ லைஃவ் கிளை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.