செப்டெம்பரில் FACETS

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிற்துறையின் பிரதான கண்காட்சியான FACETS SRI LANKA - 2018 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஓகஸ்ட் 30 முதல் செப்டெம்பர் 02 ஆம் திகதி வரை நடைபெறும்.  

இந்தச் சர்வதேச நிகழ்வானது, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடனும் (NGJA) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடனும்  (EDB) இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

சுமார் 28 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ள FACETS, சர்வதேச அரங்கில் இரத்தினக் கற்களைப் பெற்றுக் கொள்வதற்கான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் இரத்தினக்கற்கள் உட்பட மேலும் பல்வேறு தயாரிப்புகளையும் வெளிநாட்டு உற்பத்திகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள, வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் வருகைதர இருக்கின்றனர்.

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், ஆபரணங்களின் மிகப்புதிய வடிவமைப்புகள். வைரக்கற்கள், புகழ்பெற்ற கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுடன், எமது உள்நாட்டு ஆபரண உற்பத்தியாளர்களின் படைப்பு களும் பிரகாசிக்க உள்ளன.    


செப்டெம்பரில் FACETS

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.