டயலொக் Yeheli.lk, (thozhi.lk) அறிமுகம்

இலங்கையின் பிரதான தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரான டயலொக் அக்ஸியாடா பிஎல்சி இலங்கையிலுள்ள பெண்களின் உடல் ரீதியான, உணர்வுபூர்வமான நல்வாழ்வை ஆதரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமான Yeheli.lk/Thozhi.lk ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் அகற்றுவதற்கு நாட்டிலுள்ள அமைப்பான “Women in Need” உடன் இணைந்து இச்சேவையை வழங்குகின்றது.   

உள்நாட்டு இணையத்தளம், அன்ட்ரொயிட் App ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகளில் முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள கூடியதுடன், பெண்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை அணுகுவதற்கு ஒரு பாதுகாப்பான, நம்பகமான இடத்தை உருவாக்கியுள்ளதுடன் அவர்களின் உடல், உணர்ச்சி, ஆரோக்கியம் தேர்வுகள், வாய்ப்புகள் பற்றிய அதிகளவான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கலாசாரக் கட்டுப்பாடுகள், உடல் நலம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக பாலியல்,  மன ஆரோக்கியம்) வீட்டு வன்முறை, இணைய வழித் துன்புறுத்தல்கள், பெண்களும் சிறுமியர்களும் துஷ்பிரயோகம் போன்ற உணர்ச்சி பூர்வமான சிக்கல்களைக் கையாளும் திறனைப் பெறுவதற்கு வசதியற்றவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் கூடிய விடயங்களை பற்றி விவாதிக்க அல்லது கற்றுக்கொள்ள இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிபுணத்துவம் வாய்ந்த, அனுபவம் பெற்ற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்களிடமிருந்து உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஒரு சில மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியும். 

தோழி போன்ற வலைத்தளங்களினூடாக மருத்துவம், சட்டம், சமூக உளவியல், அழகு சார்ந்த விடயங்கள், ஊட்டச்சத்து தொடர்பான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.   


டயலொக் Yeheli.lk, (thozhi.lk) அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.