டேடன்ஸ் ஹார்ட் சென்டரில் MIDCAB சத்திரசிகிச்சை முன்னெடுப்பு

டேடன்ஸ் ஹார்ட் சென்ரரில், முதன் முறையாக Re-do (re-operative) குறைந்தபட்ச நேரடி துளையிடல் இருதய நாடி மாற்றுப்பொருத்து (Minimally Invasive Direct Coronary Artery Bypass) (Re-do CABG) சத்திரசிகிச்சை இருதய கோளாறு கொண்ட நபர் ஒருவரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

18 வருடங்களுக்கு முன்னர் இருதய நாடி மாற்றுப்பொருத்து வைப்பு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவரில் இந்த சிகிச்சை முன்னெடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் முதல் தடவையாக மார்பின் இடது புறத்தில் சிறிதளவு துளையிடலுடன், “re-do” MIDCAB சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

டபிள்யு. கருணாரட்ன, தனது முதலாவது இருதய நாடி மாற்றுப்பொருத்து வைப்பு சத்திரசிகிச்சைக்கு 18 வருடங்களுக்கு முன்னர் உட்பட்டிருந்தார். அது இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து தனது வழமையான வாழ்க்கையை தொடர்ந்திருந்தார்.

ஆனாலும், அண்மைக் காலப்பகுதியில் இவருக்கு அசாதாரணமான நிலை தோன்றியிருந்தது. இருதய சிகிச்சை நிபுணர் ஒருவரை நாடியதை தொடர்ந்து, அவரில் angiogram மேற்கொள்ளப்பட்டதுடன், அதனூடாக, Triple vassel நோய் நிலையுடன், இடதுபுற பிரதான கொறனரி நாடி (coronary artery) அடைப்பு காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. இது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது.   

குறித்த இருதய சிகிச்சை நிபுணரின் பரிந்துரையின் பிரகாரம், டேடன்ஸ் ஹார்ட் சென்ரருக்கு நோயாளி வருகை தந்த போது, அண்மையில் அவர் மாரடைப்புக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதுடன், முன்னர் மேற்கொள்ளப்பட்ட இருதய நாடி மாற்றுப்பொருத்து வைப்பு சத்திர சிகிச்சையிலிருந்து ஒரு bypass மாத்திரமே இயங்குவதும் கண்டறியப்பட்டது.

இவரின் இருதயத்திலிருந்து குருதி வெளியேற்றப்படும் பகுதி/ பின்னம் (ejection fraction) 30% க்கு குறைவடைந்திருந்தது. சத்திர சிகிச்சைக்கு செல்லும் வரையில், மருத்துவ கண்காணிப்பில் இவர் இருந்ததுடன், இந்த நிலையை 40 -45% வரை உயர்த்தி பேண முடிந்தது.

பெருமளவு அடைப்புகள் காணப்பட்டமையால், ஸ்டென்ட் குழாய் வைப்பு என்பது கடினமான காரியமாக இருந்தது. bypass அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதே ஒரே தெரிவாகவும் அமைந்திருந்தது. அத்துடன், ஏற்கனவே bypass மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் இது அதிகளவு இடர் நிறைந்ததாக காணப்பட்டது.   

 


டேடன்ஸ் ஹார்ட் சென்டரில் MIDCAB சத்திரசிகிச்சை முன்னெடுப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.