பரிசோதனைகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை

2020ஆம் ஆண்டளவில் அழகுசாதப்பொருட்களின் மூலப்பொருட்களை பரிசோதிப்பதற்காக விலங்குகளை பயன்படுத்துவதை, முற்றாக நிறுத்துவதற்குச் சர்வதேச ரீதியில் விழிப்புணர்வு செயற்றிட்டமொன்றை, The Body Shop ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக, அழகியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தி, உலகளாவிய ரீதியில் காணப்படும் ஆயிரக்கணக்கான விலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக, துறையில் காணப்படும் முன்னணி இலாப நோக்கற்ற அமைப்பான Cruelty Free International உடன் கைகோர்த்து, விலங்குகளில் பரிசோதனை நடவடிக்கைகளை நிறைவு செய்வது தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இந்த விடயம் தொடர்பில் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய உச்சமட்ட அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையிடம், விலங்குகளில் அழகியல் சாதனப்பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைப் பரிசோதிப்பதை இடைநிறுத்துவது தொடர்பான அறிவித்தலை மேற்கொள்ளுமாறு கோரவுள்ளது.  

விலங்குகளில் பரிசோதனைகளை மேற்கொள்வது என்பது, உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சுமார் 80சதவீதத்துக்கும் அதிகமான நாடுகளில், இந்தப் பரிசோதனைகள் தொடர்பில் எவ்விதமான சட்ட விதிமுறைகளும் இல்லை. விலங்குப் பரிசோதனைகள் தொடர்பான பாதுகாப்பு தரவுகளை பெருமளவான நாடுகள் கோராத நிலையிலும், தங்கியிருக்கக்கூடிய மாற்று வழிமுறைகள் காணப்படும் நிலையிலும், The Body Shop போன்ற நிறுவனங்கள், புத்தாக்கமான மற்றும் வினைத்திறனான சித்திரவதைக்குட்படுத்த அவசியமில்லாத மூலப்பொருட்களை தமது தயாரிப்புகளில் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் சில நாடுகளில் சுமார் 500,000 விலங்குகள் வரை அழகியல் பொருட்கள் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படுகின்றன என Cruelty Free International மதிப்பிட்டுள்ளது.


பரிசோதனைகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்த நடவடிக்கை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.