பிரசன்னா பத்மநாதனுக்கு அமைதிக்கான சர்வதேச தூதுவர் விருது

பிரசன்னா பத்மநாதனுக்கு அமைதிக்கான உலகத் தூதுவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. ‘Make it Happen’ என்ற தலைப்பில் இலங்கையெங்கிலும் அவர் முன்னெடுத்து வருகின்ற பல்வேறு ஊக்குவிப்பு மற்றும் தொழில் வாழ்வுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகளின் மூலமாக, அவர் ஆற்றி வருகின்ற மனிதாபிமானச் சேவைகள் மற்றும் தன்னார்வத் தொண்டுகள் சார்ந்த பங்களிப்புக்காக அவருக்கு இந்த இனங்காணல் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.   

தாம் முன்னெடுக்கின்ற பணிகளினூடாகச் சமூகத்தில் நல்லதொரு மாற்றத்துக்கு வித்திடுகின்ற வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகத் துறைத் தலைவர்கள், தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக முயற்சிகளை ஆரம்பிக்கின்றவர்கள், சமாதானச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அத்தகைய ஏனைய தனிநபர்களின் முயற்சிகளை இனங்கண்டு, அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்கும் வகையில் வழிகாட்டுவதாகும். 

உலக தலைமைத்துவ ஒன்றுகூடல் மற்றும் மிகப்பாரிய வர்த்தகத்துறை மேடையாக அமையப்பெற்ற Sustainable Development Accelerator மற்றும் இரண்டாவது உலக வர்த்தக தலைமைத்துவ ஒன்றுகூடல், மும்பை மாநகரிலுள்ள ITC Grand Central ஹோட்டலில் நடைபெற்றது.   

இந்தியாவின் Unified Brainz மற்றும் உலக சமாதானம் மற்றும் World Peace & Diplomacy Organization ஆகியன The Hindu Business Line உடன் ஒன்றிணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதுடன், சர்வதேச ரீதியாக 15 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தொழிற்துறையினர், மொடல்கள், நடிகர்கள் மற்றும் பணிப்பாளர்கள் என விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.   

இலங்கை போன்ற நாடுகளில் இளம் தலைமுறையினர் மத்தியில் உத்வேகத்துடனான சேவைகளையும் பங்களிப்புகளையும் தட்டிக்கொடுத்து, அவர்கள் சிறந்த வழிகாட்டிகளாகச் செயற்படுவதற்கு வாய்ப்பளிப்பதே இத்தகைய ஒரு மேடையில் வழங்கப்படுகின்ற இனங்காணல் அங்கிகாரத்தின் நோக்கமாகும். 

பத்மநாதன் தற்போது பெற்றுள்ள இந்த இனங்காணல் அங்கிகாரமானது அவர் ஆற்றி வருகின்ற பணிகளின் தொழில்நேர்த்தியான அணுகுமுறை மற்றும் போற்றத்தக்க ஆற்றல்கள் மற்றும் திறன்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. சர்வதேச வர்த்தகத்துறை பயிற்றுவிப்பாளர், ஆக்கபூர்வமான தொழில் முயற்சியாளர், சந்தைப்படுத்தல், வெகுசன தொடர்புகள் மற்றும் நவநாகரிகம் போன்ற துறைகளில் ஓர் ஆலோசகர், ஊக்குவிப்புப் பேச்சாளர், விரிவுரையாளர் மற்றும் தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர் என மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுள்ளார். வர்த்தகத்துறையில் மிகவும் பிரபலமான ஒரு நபராகத் திகழ்ந்து வருகின்றார்.     


பிரசன்னா பத்மநாதனுக்கு அமைதிக்கான சர்வதேச தூதுவர் விருது

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.