பிலியந்தலையில் எதிரிசிங்க பிறதர்ஸின் ஹைபிரிட் வாகன மய்யம்

எதிரிசிங்க பிறதர்ஸ் லிமிட்டட் Hybrid மற்றும் Plug-in Hybrid வாகனங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பட்டரி (HEV Battery) சீராக்கத்க்கான இலங்கையின் இரண்டாவது பிரத்தியேக நிலையத்தை அண்மையில் மிரிஸ்வத்தை, பிலியந்தலையில் திறந்துள்ளது.   

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது முதலாவது Hybrid மய்யத்தை கொழும்பு கெத்தாராமையிலுள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் விளையாட்டரங்குக்கு அருகில் ஆரம்பித்த எதிரிசிங்க பிறதர்ஸ் லிமிட்டட் இந்த நாட்டில் Hybrid வாகனங்களுக்கான தொழில் நிபுணர் என்ற தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

தரமுயர்ந்த சேவைகளின் வழங்கல், நிபுணத்துவ அறிவை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசாரம் என்பவற்றின் மூலம் சகல வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பாராட்டுதலையும் நிறுவனம் சம்பாதித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப சேவையிடமிருந்து பெறப்பட்ட HV Battery Diagnostic மற்றும் Conditioning முறையை இலங்கையில் பயன்படுத்துவதற்குப் பிரத்தியேகமான அதிகாரத்தை எதிரிசிங்க பிறதர்ஸின் Hybrid மய்யம் மட்டுமே கொண்டுள்ளது. பலவீனமடைந்த Hybrid பட்டரிகளின் மின்வலு மற்றும் சக்தி ஆற்றலை மூல ஆற்றலின் 95% வரை புதுப்பிக்க இத் தொழில்நுட்பம் இடமளிக்கிறது.  


பிலியந்தலையில் எதிரிசிங்க பிறதர்ஸின் ஹைபிரிட் வாகன மய்யம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.