புதிய மொபிடெல் Self-care App அறிமுகம்

   இலங்கையின் அலைபேசி சேவை வழங்குனரான மொபிடெல், புதிய அம்சங்களுடன் மொபிடெல் Self-care ​ெசயலி​ைய மேம்படுத்தியுள்ளது. தமது மொபிடெல் இணைப்புகள், உற்பத்திகள் மற்றும் சேவைகளை மொபிடெல் வாடிக்கையாளர்கள் இலவசமாக அணுகக் கூடிய வசதியை வழங்கும் இலவச App ஆக மொபிடெல் Self-care App விளங்குகின்றது.  

பயன்படுத்தல் விவரங்கள், மேலதிக திட்டங்களை ஒரே தொடுகையில் செயற்படுத்தலுடன், சிறந்த கட்டுப்பாட்டகம் போன்ற அனைத்து புதிய மற்றும் பரவலாக்கப்பட்ட அம்சங்கள் வெளிப்படைத் தன்மையுடன் தமது மொபிடெல் இணைப்ைபப் கட்டுப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவும்.

தமது குரல் மற்றும் இணைய ரோமிங் சேவைகளை சேர்த்தல் அல்லது அகற்றுவதற்கும் பரவலாக்கப்பட்ட மொபிடெல் Self-care செயலி அனுமதிக்கும். கொடுப்பனவு தெரிவுகள் மற்றும் மேலும் பல சேவைகளுக்கான கட்டுப்பாட்​ைடயும் இந்தச் ​ெசயலி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.  

மூன்று மொழிகளிலும் அமைந்துள்ள இந்தச் செயலி, அந்தந்த நேரத்துக்கான  பயன்பாட்டு மிகுதியையும் வெளிப்படுத்துகின்றது. Android மற்றும் IOS அலைபேசிகளில் மொபிடெல் Self-care App ஐ தரவிறக்க முடியும்.

நவீன தொழிநுட்பத்துடன் தமது சேவைகளையும், உற்பத்திகளையும் இணைத்துக் கொள்வதில் மொபிடெல் உறுதியாக உள்ளது. Self-care App ஐ மேலும் மேம்படுத்துவதற்கு ஆர்வத்துடன் உள்ளது. இதன் மூலம் தமது சௌகரியத்துக்கு ஏற்ற வகையில் அலைபேசி இணைப்​பை  வாடிக்கையாளர்களால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.    


புதிய மொபிடெல் Self-care App அறிமுகம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.