புது முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் அக்குரெஸ்ஸ பிராந்திய அலுவலகம்

 

அக்குரெஸ்ஸ பிராந்தியத்தில் காணப்படும் மக்களுக்கு சேவைகளை நம்பிக்கையுடன் பெற்றுக்கொடுக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது அக்குரெஸ்ஸ பிராந்திய அலுவலகத்தை, அண்மையில் புதிய முகவரிக்கு இடம்மாற்றியிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதிலும் முழுமையான செயற்றிறன் கொண்ட கிளைகளை கொண்டிருக்கும் இலக்குக்குப் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அக்குரெஸ்ஸ பிராந்திய அலுவலகம், சௌகரியமான பகுதியில் அமைந்துள்ளதுடன், பெருமளவு வாகனத்தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளது. மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இந்த காரியாலயம் திறந்திருக்கும். ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வசதிகளை கொண்டுள்ளதுடன், ஊழியர்கள் பயிற்சிகள் மற்றும் இதர பல வாடிக்கையாளர்களுக்கு எவ்வேளையிலும் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தக் கிளை அமைந்துள்ளது. தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை அலுவலகங்கள் வழங்குவதுடன், கிளை முழுமையான தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பிரத்தியேக நிதி ஆலோசகர்களையும், லப்டொப்கள் மற்றும் டெப் போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு துரித கதியில் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. 

இடம்மாற்றம் செய்யப்பட்ட அக்குரெஸ்ஸ பிராந்திய அலுவலகம், இல. 6A, டி.சி. வணிகசேகர மாவத்தை, அக்குரெஸ்ஸ எனும் முகவரியில் அமைந்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியான 30 வருட கால செயற்பாடுகளை கொண்டாடியிருந்த முதலாவது தனியார் காப்புறுதி சேவை வழங்குநராக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கிறது. இதனை அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நிபுணர்கள், உறுதியான மூலதன இருப்பையும் சர்வதேச ரீதியில் காணப்படும் உயர் தரப்படுத்தப்பட்ட மீள் காப்புறுதி பங்காண்மைகளை பேணி வருகிறது. நம்பிக்கை எனும் உறுதிமொழிக்கமைய, யூனியன் அஷ்யூரன்ஸ் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. சௌகரியம், மதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய வர்த்தக நாமப் பெறுமதிகளை, இது உறுதி செய்கிறது. 


புது முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் அக்குரெஸ்ஸ பிராந்திய அலுவலகம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.