மரங்களை நட சிறுவர்களை ஊக்குவிக்கும் Tiara

இயற்கையினதும், மரங்களினதும் விலைமதிப்பற்ற பெறுமதியை, தேசத்திலுள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், CBL Foods International (Pvt) Ltd நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படுகின்ற Tiara Cakes அண்மையில் புதுமையான மர நடுகை முயற்சியொன்றில் பங்கெடுத்திருந்தது.  

விகாரை,  தம்ம பாடசாலையின் சிறுவர்களுடன் இணைந்து யக்கல பகுதியில், அத்தனகல்ல ஓயாவிவுக்கு அருகாமையில் இச்செயற்றிட்டத்தை, Tiara ஏற்பாடு செய்திருந்தது.  

Tiara இன் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், காடு வளர்ப்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பான Thuru அங்கத்தவர்கள், வன பரிபாலனத் திணைக்களம் அடங்கலாக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலரும் நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.

சூழலை நேசித்து, அதை மதித்து, எதிர்கால நன்மைக்காக மரங்களை நாட்டி, அதன் மூலமாக மகத்தான அளவில் சூழலுக்குப் பெறுமானத்தைச் சேர்ப்பித்து, தேசத்தின் சூழல் தொகுதிக்கு பங்களிப்பாற்றுவதற்குச் சிறுவர்களை ஊக்குவிப்பதே Tiara இன் நோக்கமாகும். தொடர்ச்சியான அடிப்படையில் மர நடுகைச் செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே Tiara இன் நோக்கமாகும்.  

சூழலின் பேண்தகைமை நிகழ்ச்சிநிரல் தொடர்பில் CBL கூட்டாண்மை நிறுவனங்களின் வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற Thuru Saviya நிகழ்ச்சித் திட்டத்தை அடியொற்றியதாக Tiara மர நடுகை முயற்சி அமைந்துள்ளது.  

இந்த விசேட முயற்சி தொடர்பில் CBL Foods International (Pvt) Ltd நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பொது முகாமையாளரான நிலுபுல் டி சில்வா கருத்து வெளியிடுகையில், “மர நடுகை மற்றும் சமூக சுற்றுச்சூழல் பணியில் ஆழமான அர்ப்பணிப்புடன் Tiara ஈடுபட்டு வருகின்றது”  என்று குறிப்பிட்டார்.    


மரங்களை நட சிறுவர்களை ஊக்குவிக்கும் Tiara

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.