லங்கா ஹொஸ்பிட்டல்ஸுக்கு இரண்டாவது முறையாகவும் JCI தரச்சான்று

 

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி, Joint Commission International (JCI) இடமிருந்து, பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தரச்சான்று அங்கிகாரத்தைப் பெற்றுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் ஆய்வின் மூலமாக JCI இடமிருந்து இந்தத் தரச்சான்று அங்கிகாரத்தை இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளும் முதலாவது மருத்துவ நிலையமாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மாறியுள்ளது. 

சமூக ரீதியாக பொறுப்புணர்வு மிக்க சுகாதார சேவை வழங்கல் நிலையம் என்ற வகையில், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தனது முதலாவது முயற்சியிலேயே இந்த அந்தஸ்தை எட்டியுள்ளதுடன், புதிய தரநடைமுறைகளின் கீழ் மிகவும் குறுகிய காலப்பகுதியில் இத்தரச் சான்று அங்கிகாரத்தைப் பெற்றுள்ள உலகிலுள்ள ஒரு சில வைத்தியசாலைகளில் ஒன்றாகவும் அது மாறியுள்ளது. புதிய தர நடைமுறை தொடர்பில் JCIஇன் 6ஆவது பதிப்பானது 2017 ஜூலை 1ஆம் திகதி அமுலுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகெங்கிலும் நோயாளர் பாதுகாப்பு, சுகாதாரத்தின் தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் இலக்குடன், 100இற்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச தரச்சான்று அங்கிகாரம்,  அறிவூட்டல், வெளியீடுகள், ஆலோசனைச் சேவைகளை JCI வழங்கிவருகின்றது. சுகாதாரப் பராமரிப்புத் துறையில் கடுமையான தர நடைமுறைகளினூடாக அதியுச்ச செய‌்றிறனைப் பேணுவதற்கு உதவுவதற்கு அரசாங்க அமைச்சுகள், சர்வதேச ஆலோசகர்கள், சுகாதார முறைமைகள், முகவர் அமைப்புகள், வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள், கல்வி மருத்துவ மையங்களுடன் பங்காளராக இணைந்து JCI செயற்பட்டு வருகின்றது. 

சமீபத்தைய சாதனைப் பெறுபேறு தொடர்பில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான வைத்தியர் பிரசாத் மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு மிகச் சிறந்த சுகாதார சேவைகளை வழங்கும் முயற்சிகளை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துள்ளோம். புதிய தர நடைமுறையின் கீழ் எமது முதலாவது முயற்சியிலேயே Joint Commission Internationalஇன் சமீபத்தைய பதிப்பு வடிவத்தில் தரச் சான்று அங்கிகாரத்தை மீண்டும் பெற்றுள்ளமை எமது சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் தரத்துக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார். 

 


லங்கா ஹொஸ்பிட்டல்ஸுக்கு இரண்டாவது முறையாகவும் JCI தரச்சான்று

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.