வெள்ளிக்கிழமை, 18 மே 2012

75ஆவது வருட பூர்த்தியை கொண்டாடிய கொழும்பு நீச்சல் கழகம்

 

கட்டபில்லர் தயாரிப்புகளை இலங்கையில் விநியோகிக்கும் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான யூரிஈ நிறுவனத்துடன் இணைந்து, கொழும்பு நீச்சல் கழகம் தனது 75ஆவது வருட பூர்த்தியை கடந்த டிசெம்பர் மாதம் கொண்டாடியிருந்தது.

கொழும்பு நீச்சல் கழகத்தின் 75ஆவது வருட நிறைவை முன்னிட்டு யூரிஈ நிறுவனம் அனுசரணை வழங்குவது குறித்து நிறுவனத்தின் தலைவர் பிரியத் பெர்ணான்டோ கருத்து தெரிவிக்கையில்... 'கொழும்பு நீச்சல் கழகம் சுமார் 75 ஆண்டு கால வரலாற்றை கொண்டுள்ளது. பல தலைமுறைகளுக்கு தமது சேவைகளை இந்த கழகம் வழங்கியுள்ளது. நாம் கலாசார பெறுமதியை பெருமளவு வரவேற்கிறோம். அத்துடன் சமூக இணைப்பையும், குடும்ப அந்நியோன்யத்தையும் அதிகளவு மதிக்கும் நிறுவனம். எனவே நாம் இந்த கழகத்தின் 75ஆவது வருட பூர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுசரணை வழங்க தீர்மானித்திருந்தோம்' என்றார்.

கொழும்பின் கலாசார மையப்பகுதியில் அமைந்துள்ள கொழும்பு நீச்சல் கழகம், அனைத்து வசதிகளையும் கொண்ட ஓர் இடமாகும். தமது கழக அங்கத்தவர்களுக்கு தொடர்ச்சியாக பல சலுகைகளையும், சேவைகளையும் காலாகாலமாக வழங்கி வருகிறது.

கொழும்பு நீச்சல் கழகத்தின் 75ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில், அங்கத்தவர் தினம், ஒக்டோபர்ஃபெஸ்ட் மற்றும் ஹலோவீன் தினம் போன்றன கடந்த ஆண்டு பூராக கொண்டாடப்பட்டிருந்தது. டிசெம்பர் மாதம் கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கு யூரிஈ நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது. இதில், நத்தார் கொண்டாட்டங்கள், சிறுவர்களுக்கான நத்தார் கொண்டாட்டங்கள்; மற்றும் குடும்ப ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு யூரிஈ-கட் அன்பளிப்பு பொதிகள் பரிசுகளாக வழங்கப்பட்டிருந்தன. இதன் இறுதி நிகழ்வாக 2012 ஜனவரி 14ஆம் திகதி இசையமைப்பாளர்கள் ரொன் மற்றும் ஹெலன் லூகஸ் ஆகியோரது இசை நிகழ்வு கொழும்பு நீச்சல் கழகத்தில் இடம்பெற்றது.

1936ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு நீச்சல் கழகம், குடும்ப அங்கத்தவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் கழகமாக திகழ்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலருக்கு கொழும்பு நீச்சல் கழகம் தமது சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

Views: 91

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.