வெள்ளிக்கிழமை, 18 மே 2012

கல்முனை அமானா வங்கிக்கிளையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அமானா வங்கிக்கிளையின் ஏற்பாட்டில்  இஸ்லாமிய முறையிலான வங்கி செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இவ்வருடம் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய   மாணவர்களுக்குமே இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

கல்முனை அமானா வங்கிக்கிளை முகாமையாளர் இஸட் எம்.சபீக் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்
கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில், வங்கி உத்தியோகஸ்தர் ஏ.ஜி.எம்.சாபி, விற்பனை முகாமையாளர் யு.எல்.அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: 568

Comments   

 
0#UMMPA2012-01-26 21:55
கொஞ்சம் விளக்கம் இல்லாமல் இருக்கிறதே! நீங்கள் இவர்களுக்கு படிப்புபுக்கடன் உதவி பற்றி கலந்துரையட்டினால் அது ஓகே. மற்றும்படி "இஸ்லாமிய முறையிலான வங்கி செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல்" அவர்களுக்கு உதவப்போவதில்லை. இந்த காலகட்டத்தில். எனவே விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.