உடல் வடிவமைப்பு, நச்சு தன்மையை நீக்கல் மற்றும் தூய்மையாக்குதலுக்கு உதவும் தனித்துவமான மெலிந்த உடல்வாகையைப் பெறுதலுக்கான தீர்வு
உடல்நலன் பராமரிப்பில் முன்னணியில் திகழும் தேர்போ சிலிம் ஹெல்த் கெயார் லிமிடட், விஎல்சிசிஇன் முதன்மை எடை குறைத்தல் நிகழ்ச்சியான தேர்போ சிலிம் இனை இலங்கையில் அறிமுகப்படுத்துவதனை அண்மையில் அறிவித்தது. எடை குறைத்தல் மற்றும் சென்ரீமீற்றர் குறைத்தலுக்கு அப்பால், மெலிந்த, ஆரோக்கியமான மற்றும் சிறந்த உடல் வாகினை ஏற்படுத்தும் நச்சகற்றலுக்கும் இந்த சிகிச்சை உதவுவதே, சிகிச்சையின் பிரதான அடிப்படையாக இருக்கின்றது. விஜேராமவில் அமைந்துள்ள, விஎல்சிசி நிலையத்தில், விஎல்சிசி ஸ்தாபகர் வந்தனா லூத்ராவினால் இந்த தனித்துவமான நிகழ்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த வந்தனா லூத்ரா, 'இலங்கை வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். மிகவும் முதிர்ச்சியடைந்த மற்றும் உடல்நலனில் அக்கறைக் கொண்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பாடுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளது. எங்களுடைய நவீன மற்றும் சிறந்த எடை குறைப்பு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இந்த தனித்துவமான நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், குறுகிய காலத்தில், ஆரோக்கியமான முறையில் சிறந்த பெறுபேறுகளை தருகின்றது. முழுமையான உடல் சுத்திகரிப்புடன் கூடிய நச்சகற்றலுடன் இணைந்ததாக எடை குறைக்கப்படலே இந்த நிகழ்ச்சியின் பிரதான அம்சமாக உள்ளது.' எனக் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், 'வேகமாக கடந்து செல்லம் வாழ்க்கை முறை, நீண்ட பணி நேரங்கள், உறக்க குழப்பம், ஒழுங்கற்ற உண்ணல் பழக்கங்கள் மற்றும் குறைந்த நடவடிக்கையினால் எமது உடல் முறையான உணவு மற்றும் பராமரிப்பினை பெற்றுக் கொள்ளாதிருப்பதினால், உடல் பருமனாதல் மற்றும் வேறு சம்பந்தப்பட்ட வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, ஆரோக்கியமான உடல்நலனைப் பேணுவதற்கு முறையான உணவு மற்றும் பராமரிப்பு அவசியமாகும். தற்போதைய வாழ்க்கை முறையிலும், முழுமையான உடல் நலனை வழங்க முடியும் என்பதற்காகவே, நாம் இந்த சிகிச்சை நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகின்றோம்' என்றார்.
இலங்கையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டவிஎல்சிசி தேர்போ சிலிம் (Turbo Slim) நிகழ்ச்சியானது, இரண்டு மணித்தியால சிகிச்சையாகும். விசேட தொழில்நுட்பங்கள் மற்றம் தயாரிப்புக்களின் உதவியுடன் இந்த சிகிச்சை வழங்கப்படும். புறப்பரப்புக்களுக்கான இரத்த சுற்றோட்டத்தை விரிவாக்கும் இந்த சிகிச்சை, நிணநீர் வடிகாலுக்கு வசதியளிக்கின்றது. உடல் வாகு மற்றும் மெருகேற்றலுக்கு உதவுவதுடன், துரித எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த சென்ரீமீற்றர் இழப்புக்கும் துணை புரிகின்றது. விரிவாக்கம் பெறும் இரத்தச் சுற்றோட்டம் காரணமாக, உணவு மற்றும் தசைகளின் குணமாக்கல் மேம்படும்.
இந்த சிகிச்சையைப் பெறுவதற்கு வாரத்திற்கு இரண்டு தடவைகள் விஎல்சிசிநிலையத்திற்கு விஜயம் செய்தல் போதுமானது. ஒவ்வொரு விஜயத்தின் போதும், 500 கிராம் வரையான எடையிழப்பு மற்றும் அதனுடன் இணைந்த சென்ரீமீற்றர் இழப்பு உறுதி செய்யப்படும். ஒட்டு மொத்தமாக, கொழுப்பு பயன்பாடு, நிணநீர் வடிகால், நச்சு அகற்றல் மற்றும் முழுமையான ஒய்வு என்பவற்றை இந்த சிகிச்சை வழங்கும். இந்த சிகிச்சை குறைந்த வளர்சிதை மாற்றம், மலச்சிக்கல் மற்றும் திரவக்கோர்வை உள்ளவர்களுக்கும் பயனளித்துள்ளது.
விஎல்சிசி
உடல் நலன் பராமரிப்பில் மூன்று சம்பந்தப்பட்ட துறைகளில்விஎல்சிசி குழுமம் ஈடுபட்டுள்ளது.
- உடல் மெலிதல், தோல் மற்றும் தலைமயிர் சேவைகள்
- கல்வி மற்றும் பயிற்சி நிறுவகங்கள், மற்றும்
- தனிநபர் பராமரிப்புக்கான தயாரிப்புக்களை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
விஞ்ஞான ரீதியான எடை குறைப்பு தீர்வுகளுக்காகவும், அழகு சிகிச்சைகளுக்கான சிகிச்சைசார் அணுகுமுறைக்காகவும் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டதாக விஎல்சிசி உள்ளது. இந்தியாவில் 109 நகரங்களில், 260 கிளைகளை விஎல்சிசி குழுமம் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் 11 நிலையங்கள், ஓமான், பஹ்ரேன் மற்றும் பங்களாதேஷில் தலா இரண்டு நிலையங்கள் மற்றும் நேபாளம் மற்றும் இலங்கையில் தலா ஒரு நிலையம் என சர்வதேச சந்தையில் 19 நிலையங்களைக் கொண்டுள்ளது.
சுமார் ஆறாயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ளதுடன், அவர்களில் வைத்தியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உளவியலாளர்கள், அழகியல் சிகிச்சையாளர்கள் மற்றும் உடற்கூறியல் நிபுணர்கள் உள்ளடங்கலாக மூன்றில் இரண்டு பங்கினர் சிறந்த அனுபவமுடைய நிபுணர்களாக உள்ளனர். அத்துடன், குழுமம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியுள்ளனர். உடல்நலன் பராமரிப்பில் நன்கு அறியப்பட்ட நிலையை விஎல்சிசி இன்று அடைந்துள்ளது. (படம்:இந்திரரட்ன பாலசூரிய)








