வெள்ளிக்கிழமை, 18 மே 2012

செரண்டிப் மா ஆலை நிறுவனத்திற்கு ஐஎஸ்ஓ 22000:2005 தரச் சான்றிதழ்

 

'செவன் ஸ்டார்' வர்த்தக குறியீட்டினைக் கொண்ட கோதுமை மாவின் உற்பத்தியாளர்களான செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் இந்தியாவின் Bureau Veritas பணியகத்திடம் இருந்து உணவுப் பாதுகாப்பு முறைமைக்கான ஐஎஸ்ஓ (ISO) 22000 : 2005 தரச் சான்றிதழை அண்மையில் பெற்றுள்ளது. முக்கியமான சர்வதேச விதிமுறைகள் மற்றும் பிரகடனங்களை கடைப்பிடிப்பதில் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள முழுமைத்துவமான செயற்பாட்டினை அங்கீகரிக்கும் வகையில் இந்த நற்சான்றுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு முறைமைக்கான ஐஎஸ்ஓ 22000:2005 தரச் சான்றிதழ் ஆனது, உலகளவிலேயே உணவு தொடர்பான சான்றுபடுத்தல்களில் மிகவும் உயர்வானதும் மிகுந்த அங்கீகாரத்தைப் பெற்றதுமாக திகழ்கின்றது. அந்த வகையில், இலங்கையில் வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பித்து மூன்று வருடங்கள் என்ற மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம் குறித்த நிறுவனம் முத்திரை பதித்துள்ளது.

'இலங்கையில் எமது நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கும் அத்துடன் உற்பத்திகளின் தரத்திற்கும் கிடைத்துள்ள ஒரு சர்வதேச அளவிலான அங்கீகாரமாக இந்த சான்றிதழ்; காணப்படுகின்றது. இது, நிறுவனம் மட்டும் பெற்றுக் கொண்ட ஒரு சாதனை அல்ல: மாறாக, செவன் ஸ்டார் கோதுமை மாவில் அடங்கியுள்ள தூய்மை மற்றும் ஊட்டச் சத்து ஆகியவற்றை அனுபவித்துப் பார்த்த பல்லாயிரக்கணக்கான இலங்கை மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த சாதனையாகும்' என்று செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான சதக் அப்துல் காதர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராஜ்சியத்தின் துபாயை தலைமையகமாக கொண்டு இயங்கும் அல்குராயிர் குழும கம்பனிகளின் ஓர் அங்கத்துவ நிறுவனமான செரண்டிப் மா ஆலை பிரைவேட் லிமிட்டட் ஆனது, இலங்கை முதலீட்டு சபையின் மிகமுக்கிய செயற்றிட்டங்களுள் ஒன்றாக கருதப்படும், சுமார் 56 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய அதி நவீனமானதும் ஒரே தடவையில் நாளொன்றுக்கு 1000 தொன் உற்பத்தியை மேற்கொள்ளும் அளவுக்கு கொள்ளளவைக் கொண்டதுமான கோதுமை மா ஆலையினை கொழும்பு துறைமுகத்தில்;; செயற்படுத்தி வருகின்றது. செரண்டிப் மா ஆலை நிறுவனமானது தற்N;பாது இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வட ஆபிரிக்கா, மாலைதீவுகள் மற்றும் வியட்னாம் போன்ற பல்வேறு தூர கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் தனது உற்பத்திகளை ஏற்றுமதி செய்து வருவதுடன் மேலும் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

செரண்டிப் மா ஆலை நிறுவனமானது இடைத்தொடர்புபட்ட முகாமைத்துவ முறைமையை ஏற்கனவே ஸ்தாபித்து, அதனை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த முறைமையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பராமரித்தல் ஆகிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடைத்தொடர்புபட்ட முகாமைத்துவ முறைமை என்பது நான்கு சர்வதேச தர நிர்ணயங்களுக்கான தேவைப்பாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. (உதாரணமாக: ஐஎஸ்ஓ 9001:2008, ஐஎஸ்ஓ 14001:2004, ஐஎஸ், 22000:2005  மற்றும் பிஎஸ் ஓஹாஸ் (BS OHAS) 18001:2007 ஆகியவையாகும்). அதேநேரம், இம்முறைமையை தொடர்ந்தும் மேம்படுத்துவதில் செரண்டிப் மா ஆலை நிறுவனம் முனைப்புடன் இருக்கின்றது.

தர முகாமைத்துவ முறைமையின் அடிப்படையாக ஐஎஸ்ஓ 9001 காணப்படுகின்றது. நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றம், வர்த்தக வளர்ச்சி மற்றும் செயற்றிறன் ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சிறப்பான செயற்பாடுகள் மற்றும் தர முகாமைத்துவ முறைமைக்கு உறுதியானதொரு அடித்தளம் ஒன்றினை ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழானது உறுதி செய்கின்றது.

ஐஎஸ்ஓ 14001 தரச் சான்றிதழானது, இடைத்தொடர்புபட்ட முகாமைத்துவ முறைமைக்குத் தேவையான சூழல் முகாமைத்துவ உள்ளடக்கங்களை கொண்ட ஒரு தரநிர்ணயமாக காணப்படுகின்றது. அதேநேரம், உணவுப் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைக்கான அடிப்படையாக ஐஎஸ்ஓ 22000 திகழ்கின்றது.

இடைத்தொடர்புபட்ட முகாமைத்துவ முறைமைக்கான தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவ உள்ளடக்கங்களைக் கொண்ட தர நிர்ணயமாக பிஎஸ் ஓஹாஸ் (BS OHAS) 18001 உள்ளது. பிஎஸ் ஓஹாஸ் (BS OHAS) 18001:2007 இன் இணைப்பானது, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கோணங்களில் நோக்கும் போது பாதுகாப்பு மிக்கதொரு சுற்றுச் சூழலில் வர்த்தகத்தை நடத்துவதற்கான கட்டமைப்பு ஒன்றினை நிறுவனத்திற்கு வழங்குகின்றது.

கடந்த நத்தார் பண்டிகைக் காலப்பகுதியில், நான்கு வகையான புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலம் செரண்டிப் மா ஆலை நிறுவனம், இலங்கையின் நுகர்வோர் வர்த்தக சந்தைக்குள் நுழைந்தது. செரண்டிப் மா ஆலை நிறுவன உற்பத்திகளான – வீட்டுப் பாவனைகளுக்கு உகந்த மா, முழுமையான கோதுமை மா, ஆட்டா மா போன்ற ஊட்டச் சத்துக்கள் அடங்கிய செரண்டிப் மா ஆலை நிறுவனத்தின் உற்பத்திகளை 01 கிலோகிராம் நிறையுடைய பக்கெட்களிலும் அதேநேரம் ரவையை 500 கிராம் பக்கெட்டிலும் இப்போது வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

'செவன் ஸ்டார்' மாவானது, உலகெங்கும் உள்ள சிறந்த கோதுமை வயல்களில் இருந்து பெறப்பட்ட தரமான கோதுமை தானியத்தைப் பயன்படுத்தி அனுபவம் பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களினால், மனிதர்களின் கை படாதவாறு (இயந்திரத்தினால்) உற்பத்தி செய்யப்படுகின்றது. செரண்டிப் மா ஆலையானது உபாய ரீதியான அமைவிடமாக திகழும் கொழும்பு துறைமுகத்தில் அமையப் பெற்றுள்ள காரணத்தால், இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் இத்துறை சார்ந்தவர்களுக்கும் நட்சத்திர தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையுடன் தரமான கோதுமை மாவினை விரைவாக வழங்கக் கூடியதாகவுள்ளது.

'இலங்கையில் கோதுமை மா தெரிவுகளில் முதன்மையானதாக திகழ்வதும், சர்வதேச சந்தைகளுக்கான விருப்பத்திற்குரிய கோதுமை மா விநியோகஸ்தராக செயற்படுவதுமே எமது தூரநோக்காகும். பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த தரத்திலான, கோதுமையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளை மேற்கொள்வதும் அவற்றை விநியோகிப்பதும் எமது இலக்காக உள்ளது. எமது பங்காளர்களுடன் செழிப்பான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான வர்த்தக உறவுகளை விருத்தி செய்வதற்கும், எமது ஊழியர்களுக்கு சிறந்த தொழில்சார் வேலைச் சூழல் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஆரோக்கியமான பங்கிலாபங்களை வழங்குவதற்கும் நாம் எதிர்பார்க்கினN;றாம்' என்று காதர் கூறி முடித்தார்.

Views: 111

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.