வெள்ளிக்கிழமை, 18 மே 2012

எச்ஐவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவின் எயிட்ஸ் விழிப்புணர்வு திட்டம் ஆரம்பம்

 

எச்ஜவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு - 2012ஆம் ஆண்டுக்கான எச்ஐவி மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. இந்த திட்டம் எச்ஐவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவின் தலைவர் கிஷு கோமஸ் மூலம் எயிட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையணையை இலங்கையின் ஸ்டான்டர்ட் சார்ட்டட் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனிர்வான் கோஷ் தஸ்டிடாரிடம் கையளித்திருந்ததுடன் ஆரம்பமாகியது. 

2012ஆம் ஆண்டு விழிப்புணர்வு திட்டத்துக்கு 'விழிப்புணர்வை பரப்பிடுங்கள், எயிட்ஸை அல்ல' என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 60இற்கும் அதிகமான அங்கத்துவ நிறுவனங்களை கொண்டுள்ள எச்ஜவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் பிஎல்சி ஓர் அங்கத்துவ நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சர்வதேச ரீதியில் பயிற்சிகளை பெற்ற எயிட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கக்கூடிய நிபுணர்கள் உள்ளனர். இந்நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எச்ஐவி மற்றும் எயிட்ஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னணியில் திகழ்வதை முன்னிட்டு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அதன் தலைவர் கிஷு கோமஸ் கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தக சமுதாயத்தில் சுமார் 8 மில்லியன் பேர் வரை உள்ளனர். வர்த்தக தலைவர்கள் எனும் வகையில், எச்ஜவி குறித்தும் எயிட்ஸ் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடமையாகும். இந்த நடவடிக்கையையே இலங்கை வர்த்தக ஒன்றிணைவு வர்த்தக சமுதாயத்துக்காக முன்னெடுக்கிறது. எமது இலக்கு வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தையும், சமுதாயத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்' என்றார்.

தற்போது எச்ஜவிக்கான இலங்கை வர்த்தக ஒன்றிணைவில் 60இற்கும் அதிகமான அங்கத்தவர்கள் உள்ளனர். இந்த அனைத்து நிறுவனங்களிலும் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இதற்காக விசேடமான நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எயிட்ஸ் மற்றும் எச்ஐவிக்கான ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான வர்த்தக ஒன்றிணைவு அமைப்பின் செயற்பாடுகள் குறித்து இந்த விழிப்புணர்வு ஆரம்பிக்கப்படும் நிகழ்வில் ஸ்ரீபன் கிரான்ட் உரையாற்றுகையில், 'பிராந்தியத்தைச் சேர்ந்த எமது அங்கத்துவ நிறுவனங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம்' என்றார். இந்நிகழ்வில் தேசிய எயிட்ஸ் மற்றும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தின் பதில் ஆலோசகராக பணியாற்றும் வைத்தியர் கீதானி சமரவீரவும் நாட்டில் எயிட்ஸ் மற்றும் எச்ஐவி இன் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.  

புள்ளி விபரங்களுக்கு அமைவாக, உலகளாவிய ரீதியில், வேலைத்தளங்களில் பணிபுரிவோரில் 10 பேரில் 9 பேர் எச்ஐவியுடன் வாழ்வதாக அறிய வந்துள்ளது. இது குறித்து முறையாக வழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிடின் வேலைத்தள செயற்றிறன் வீழ்ச்சியடைந்துவிடும். அத்துடன் இந்த தொற்றுக்கு இலக்காவோரின் எண்ணிக்கையும் இலங்கையில் அதிகரித்த வண்ணமுள்ளது. இலங்கையில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தேவை எழுந்துள்ளது. நாளாந்தம் ஒரு எச்ஐவி தொற்று வீதம் ஏற்பட்ட வண்ணமுள்ளது.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை பேட்ஸ் ஸ்ராட்டஜிக் எலையன்ஸ் நிறுவனத்தின் மூலம் நெறியாள்கை செய்யப்பட்டிருந்தது. அத்துடன், இந்த திட்டத்தை பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளையும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கிறது. 

Views: 61

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.