வெள்ளிக்கிழமை, 18 மே 2012

நுண் நிதி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியூட்டிய கொமர்ஷல் கிரடிட்

 

கொமர்ஷல் கிரடிட் தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான அனுபவத்தை வழங்கி இலங்கையின் நிதித் துறையில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை இலங்கை முழுவதும் பரந்து இருக்கும் 90,000 நுண் நிதியில் உள்ள வாடிக்கையாளர்களில் 5,000 தெரிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் அவிசாவெல, கலுஅக்கலவில் உள்ள லெஷர் வேர்ல்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பலதரப்பட்ட உற்சாகமூட்டும் நிகழ்வுகளுடன் மாலை நேரத்தை செலவிட்ட அவர்கள் மொழி, கலாசார மற்றும் பூகோள எல்லைகளுக்கப்பால் அனைவருடனும் பழக ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்தது. கொமர்ஷல் கிரடிட்டுடன் இணைந்தது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்பதே அனைவரின் ஏகோபித்த குரலாக இருந்ததுடன், கொமர்ஷல் கிரடிட்டின் ஆதரவுடன் நுண் நிதி செயற்பாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையிட்டு நன்றியுள்ளவர்களாக உள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் பி.டி.டப்ளியூ.ஏ.சில்வா, கொமர்ஷல் கிரடிட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே, தொழில்புரியும் பணிப்பாளர் திருமதி கேயா எகொடகே உள்ளிட்ட கொமர்ஷல் கிரடிட் அதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்: நிகழ்வுக்கு இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் பி.டி.டப்ளியூ.ஏ.சில்வா வருகை தருவதையும் - கொமர்ஷல் கிரடிட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் எகொடகே மற்றும் தொழில்புரியும் பணிப்பாளர் திருமதி கேயா எகொடகே ஆகியோர் அருகில் உள்ளதையும் படத்தில் காணலாம்.

Views: 99

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.