வெள்ளிக்கிழமை, 18 மே 2012

றிட்ஸ்பரி அனுசரணையில் ஈரநிலங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டம் தொடர்கிறது

 

இயற்கை வனப்பு மிக்க தேசத்தின் ஈர நிலங்கள் குறித்த பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக றிட்ஸ்பரி சொக்லேட் வகைகளை தயாரிக்கும் சிபிஎல் பூட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உலக ஈரநிலங்கள் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கொண்டிருந்தார்.

'ஈரநிலங்கள் மற்றும் சுற்றுலாத்துறை' எனும் தொனிப்பொருளில் இந்த முறை உலக ஈரநிலங்கள் தின நிகழ்வுகள் அண்மையில் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் விமர்சையாக இடம்பெற்றது.

இம்முறை விசேட அம்சமாக, 'றிட்ஸ்பரியுடன் ஈரநிலங்கள் வினா - விடை போட்டி' பாடசாலை மாணவர்களிடையே முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது. றிட்ஸ்பரி சொக்லேட் வகைகளின் மூலம் பூரண அனுசரணை வழங்கப்பட்டிருந்த இந்த வினா - விடை போட்டிகளில், பாடசாலை கோட்டம், வலயம், மாவட்டம் மற்றும் தேசிய ரீதியில் வெற்றிபெற்றோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தேசிய மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் முதலாமிடத்தை களுத்துறை ஞானோதய மஹா வித்தியாலயத்தின் பி.ஷனீகா ஹேமந்தி வெற்றிபெற்றிருந்தார். இரண்டாமிடத்தை காலி கிறிஸ்துதேவ மஹா வித்தியாலயத்தை சேர்ந்த எச்.எம்.ருவனி ஹேமந்திகா வெற்றிபெற்றிருந்தார். மூன்றாமிடத்தை கலேவெல வீரகெட்டிய விமலரத்ன மஹா வித்தியாலயத்தின் ஆர்.டி.தேவிந்திர பிராஹாஷ்வர வெற்றிபெற்றிருந்தார்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட சூழல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் சிபிஎல் பூட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தலைவர் ரம்ய விக்ரமசிங்க ஆகியோர் மூலம் இந்த வெற்றிக் கேடயங்களும், பரிசுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.

உலக ஈர நிலங்கள் தினத்தை முன்னிட்டு றிட்ஸ்பரி மூலம் தயாரிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கான நேர அட்டவணைகள் அமைச்சர்களிடம் உத்தியோகபூர்வமாக சிபிஎல் பூட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தலைவர் ரம்ய விக்ரமசிங்க மூலம் கையளிக்கப்பட்டிருந்தது.
இங்கு கருத்து தெரிவித்திருந்த சிபிஎல் பூட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இமால் பொன்சேகா, 'றிட்ஸ்பரியுடன் ஈரநிலங்கள் வினா - விடை போட்டியை பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பதற்காக தாம் சுமார் 40 இலட்சத்துக்கு அதிகமான பணத்தை முதலீடு செய்திருந்தோம், இது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி மேற்கொண்டிருந்த முதலீடாக நாம் இதை கருதுகிறோம். நாட்டின் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக எமது நிறுவனம் தம்மை அர்ப்பணித்துள்ளது. றிட்ஸ்பரி ஜேர்னிடே எனும் தலைப்பில் நாம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் முன்னெடுத்து வருகிறோம். இதற்காக நாம் சுமார் 10 கோடி ரூபாவை செலவிட்டுள்ளோம்' என்றார்.

இந்நிகழ்வில் சிபிஎல் குழுமத்தின் பணிப்பாளர் நிஷ்கா வீரசூரிய, சிரேஷ்ட அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் அமைச்சுக்களின் உயரதிகாரிகள் போன்றோரும் பங்குபற்றியிருந்தனர்.



படவிளக்கம்:
ஈரநிலங்கள் வினா - விடை போட்டியில் முதலாமிடத்தை பெற்ற களுத்துறை ஞானோதயா மஹா வித்தியாலயத்தின் மாணவி பி.ஷனீகா ஹேமந்தி தமக்குரிய விருதை கல்வி மந்றும் சுற்றாடல் அமைச்சர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதையும், அருகில் சிபிஎல் ஃபூட்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தலைவர் ரம்ய விக்ரமசிங்க காணப்படுவதையும் ஈர நிலங்கள் குறித்து சிபிஎல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நேர அட்டவணையை அமைச்சர்களிடம் அவர் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.

Views: 60

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.