வெள்ளிக்கிழமை, 18 மே 2012

'லக்ஸ் பேர்பிள் லோட்டஸ்'

 

பெண்களின் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் லக்ஸ், அண்மையில் தனது மற்றுமொரு புதிய ரகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 'லக்ஸ் பேர்பிள் லோட்டஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. அழகு சேர்த்திடும் எண்ணெய் வகைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த புதிய பேர்பிள் லோட்டஸ் சோப் வகை தற்போது இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த புதிய ரகம் குறித்து யுனிலீவர் நிறுவனத்தின் சரும பராமரிப்பு தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் அதிகாரி சர்மிளா பண்டார கருத்துத் தெரிவிக்கையில், 'நறுமணத்துடன் திகழ்வதற்கும், நறுமணத்துடனான சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கும் பெருமளவான இளம் பெண்கள் விரும்புகின்றனர். ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு சில நிமிடங்களாவது தமது வேலைப்பழுவை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த சிகிச்சையை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். இந்த புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளதன் நோக்கம், இலங்கையர்களின் சிந்தனைக்கு மிகவும் அண்மித்ததாக காணப்படுவதால் நவீன பாணியில் தமது வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பெண்களுக்கு தீர்வாக அமையும் வகையில் உள்ளது' என்றார்.

தாமரை என்பது கலாசார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மலராகும். இந்த மலர் தூய்மை, சிறந்த ஆரோக்கியம், சாந்தி, செழுமை, தெய்வீகம், போன்றவற்றை பண்டைய காலம் தொட்டு பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதுடன் தாமரை மற்றும் தாமரை எண்ணெய் போன்றன, பெண்களின் அன்றாட அழகு சாதன மூலமாக உலகளாவிய ரீதியில், எகிப்து, இந்தியா, தாய்லாந்து மற்றும் இலங்கை உள்ளடங்கலாக திகழ்கிறது. தற்போதைய நவீன யுகத்திலும், தாமரை மற்றும் தாமரை எண்ணெய் போன்றன நறுமண சிகிச்சையில் அன்ரிசெப்ரிக், சுருக்கம், தூய்மை மற்றும் கலங்களுக்கு புத்துணர்ச்சியளித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. நறுமண சிகிச்சை முறை கொள்கையானது, ஆரோக்கியம் மற்றும் வேலைப்பழுவிலிருந்து விடுபட்ட மனநிலையிலிருந்து ஆரோக்கியமான உடல் மீட்சி பெறுகிறது. இதில் தாமரை எண்ணெய் முக்கிய பங்கை வகிக்கிறது. உடல் மசாஜ்களின் போதும் குளியல்களின் போதும் தாமரை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

யுனிலீவர் நிறுவனத்தின் லக்ஸ் வர்த்தகச் சின்ன முகாமையாளர் நுவன் வித்யாபதிகே கருத்துத் தெரிவிக்கையில், 'புதிய 'லக்ஸ் பேர்பிள் லோட்டஸ்' மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு குளியலும், மனநிறைவான அனுபவத்தினை அள்ளி வழங்குவதுடன் தூய்மை மற்றும் புத்துணர்ச்சி வழங்குவதாகவும் அமைந்திருப்பதுடன் இது தாமரை மலரிதழைப் போன்ற வசீகரத்தோற்றம் கொண்ட சருமத்தை பெண்களுக்கு வழங்கும்' என்றார்.

தற்போதைய வேலைப்பழுமிக்க காலப்பகுதியில் பெண்கள் தமது நேரத்தை இது போன்ற சிகிச்சை முறைகளுக்காக ஒதுக்கிக் கொள்வதில் பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சோர்வாகவும், பிரச்சினைகள் மிக்க சருமங்களை எதிர் கொள்கின்றனர். புதிய 'லக்ஸ் பேர்பிள் லோட்டஸ்' சோப் வகை அறிமுகத்தின் மூலம் பெண்களுக்கு அவர்களின் சருமத்தை தாமரை மலரிதழைப் போன்று மிருதுவாகவும் நறுமணம்மிக்கதாகவும் சீராக பேணிக்காத்திட உதவும்வகையிலும் அமைந்திருப்பதுடன் வீட்டிலிருந்தவாறே அவர்களுக்கு இச் சிகிச்சையினை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

Views: 112

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.