வெள்ளிக்கிழமை, 18 மே 2012

நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு ஆர்பிகோ மூலம் போக்குவரத்து சைகை கோன் வகைகள் அன்பளிப்பு

 

றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனத்தின் மூலம், நுகேகொட பொலிஸ் நிலையத்துக்கு போக்குவரத்து சைகை கோன் வகைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளாந்தம் இடம்பெறும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த சைகை கோன் வகைகளை ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனம் மேல் மாகாணத்தின் தென் பகுதிக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம்.கருணாரத்னவிடம் கையளித்திருந்தது. இந்நிகழ்வு லைசியம் சர்வதேச பாடசாலையில் இடம்பெற்ற பாடசாலை போக்குவரத்து சீராக்கல் பிரிவின் விருதுகள் வழங்கல் 2011 நிகழ்வின் போது இடம்பெற்றிருந்தது.

ஆர்பிகோ பிளாஸ்டிஷெல்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டமாக இடம்பெறும் இந்த போக்குவரத்து சைகை கோன் அன்பளிப்பு நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் எமில் சேனாநாயக்க மூலம் வழங்கப்பட்டிருந்தது.

19 வருடங்களுக்கு முன்னர் முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்ட பிளாஸ்ரிக் நீர்தாங்கிகளை இலங்கையில் அறிமுகம் செய்திருந்த ஆர்பிகோ, ஐஎஸ்ஓ 9001:2008 தரச்சான்றிதழை பெற்ற ஒரே பிளாஸ்ரிக் நீர்த்தாங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுபோன்று மூன்று லேயர் நீர்த்தாங்கி, சம்ப் தாங்கி, குப்பை வாளிகள், செப்ரிக் தாங்கிகள் மற்றும் கொம்போஸ்ட் வாளிகள் போன்றன நவீன தீர்வைகளாக ஆர்பிகோ மூலம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு மேலதிகமாக ஆர்பிகோ நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் ஆர்பிகோ பிவிசி குழாய்கள் மற்றும் பாகங்கள் போன்றனவும் இந்நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எஸ்எல்எஸ் தரச் சான்றிதழ் பெற்ற உலகின் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆர்பிகோ நீர் குழாய்கள் மற்றும் பாகங்கள் அனைத்து நீர்க்கட்டமைப்புகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

80 வருட கால வரலாற்றைக் கொண்டதும் 30000 இற்கும் அதிகமான ஊழியர்களை கொண்டதும் அங்கத்துவ நிறுவனங்கள் 42ஐக் கொண்ட இலங்கையின் மிகப்பெரும் வியாபாரக் குழுமமான றிச்சர்ட் பீரிஸ் குழுமம் முற்றிலும் உள்நாட்டு நிறுவனம் என்பது விசேட அம்சமாகும். அதிகளவு பங்குகளை கொண்ட உள்நாட்டு வர்த்தக துறைகள் பலவற்றில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இந்நிறுவனம் சுப்பர் மார்க்கெட் தொடர், பெருந்தோட்டத்துறை, பங்குச்சந்தை முகவர் செயற்பாடுகள், ரயர், பிளாஸ்ரிக் மற்றும் கட்டுமான வேலைகள் போன்றன இவற்றில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
 

Views: 65

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.