
யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி கிருமி கொல்லி தயாரிப்புகளில் ஒன்றான லைஃவ்போய்க்கு அண்மையில் இடம்பெற்றிருந்த சிலிம் (SLIM) – நீல்சன் மக்கள் விருதுகள் - 2012இல் மூன்று விருதுகள் கிடைத்திருந்தன. இந்த விருதுகளின் மூலம் தொடர்ச்சியாக இலங்கை பாவனையாளர்கள் மத்தியில் இந்த தயாரிப்பின் பிரதிபலிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரத்தியேக பராமரிப்பு பிரிவில் வேகமாக விற்பனையாகும் வாடிக்கையாளர் பொருட்கள் ஆண்டின் சிறந்த வர்த்தக நாம விருது, வேகமாக விற்பனையாகும் வாடிக்கையாளர் பொருட்களில் இளைஞர்கள் மனம் கவர் வர்த்தக நாம விருது மற்றும் ஆண்டின் சிறந்த வேகமாக விற்பனையாகும் வாடிக்கையாளர் பொருள் விருது போன்றன லைஃவ்போய்க்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் தொடர்ச்சியான நான்காவது வருடமாக பிரத்தியேக பராமரிப்பு பிரிவில் வேகமாக விற்பனையாகும் வாடிக்கையாளர் பொருட்கள் ஆண்டின் சிறந்த வர்த்தக நாம விருதை வென்றிருந்தமை விசேட அம்சமாகும். இவ்வருடம் வர்த்தக நாமத்துக்கு பெருமளவு கிடைத்திருந்தமை விசேட அம்சமாகும். இந்த விருதுகளுக்காக போட்டியிட்டிருந்த ஏனைய வர்த்தக நாமங்கள் மத்தியில் பொதுமக்களிடையே மேற்கொள்ளப்பட்டிருந்த விருப்பு தெரிவின் மூலம் இந்த விருதுகளுக்காக லைஃவ்போய் வர்த்தக நாமம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருதுகள் கிடைத்திருந்தமை குறித்து யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ரமணி சமரசுந்தர கருத்து தெரிவிக்கையில், 'யுனிலீவர் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்புகளாகும். மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவும் வகையில், பல ஆண்டுகளாக இந்த தயாரிப்புகள் அமைந்துள்ளன. இதனால் மக்களால் பெரிதும் விரும்பப்படும் தயாரிப்புகளாகவும் இவை அமைந்துள்ளன' என்றார்.
லைஃவ்போய் வர்த்தக நாமத்தின் சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் சௌமியா பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'பல தலைமுறையாக இலங்கை குடும்பத்தினரின் சுய பாதுகாப்பு தயாரிப்பாக லைஃவ்போய் திகழ்கிறது. லைஃவ்போய் வர்த்தக நாமத்தின் நீண்ட கால நோக்கில் அமைந்த வௌ;வேறு வகையான சமூக அர்ப்பணிப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக, லைஃவ்போய் மூலம் பெருமளவான சமூக பொறுப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கப்படுகிறது. இவற்றில் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான செயற்றிட்டங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு லைஃவ்போய் நாமம் குறித்த சிறந்த அபிப்பிராயம் நிலவுகிறது. இதன் மூலமாக எமக்கு இந்த விருதுகளுக்காக தெரிவாவதற்கு காரணமாக அமைந்திருந்தது. இந்த விருதுகளின் மக்களின் தெரிவுக்கமைவாக கிடைத்துள்ளன. அவர்களின் ஆரோக்கியத்தில் அவர்கள் காண்பிக்கும் அக்கறை இதன் மூலம் உறுதியாகிறது. கருத்துரைகளை வழங்கக்கூடிய நபர்களிடையே இந்த வர்த்தக நாமம் பிரபல்யமடைந்துள்ளது. தொடர்ந்தும் சமூகத்தில் தனது பணியை முன்னெடுக்கிறது' என்றார்.
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் மூலம் வருடாந்தம் நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் விருது வழங்கல் நிகழ்வாக மக்கள் விருதுகள் அமைந்துள்ளது.
சர்வதேச கைகளை கழுவுதல் தினம் ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு லைஃவ்போய் கைகளை கழுவுதலின் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வு மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. 2008ஆம் ஆண்டு முதல் லைஃவ்போய் முன்னெடுத்துவரும் மிகப்பெரிய சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
யுனிலீவர் நிறுவனம் தனது முன்னணி சுகாதார மற்றும் பிரத்தியேக பாதுகாப்பு வர்த்தக நாமத்தினூடாக சமூகத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில், கைகளை கழுவுதல் மூலம் பாதுகாப்பான இல்லங்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தை உருவாக்கிடும் திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. சிறிய செயற்பாடுகளும் பெரியளவிலான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியன என்பதில் லைஃவ்போய் வர்த்தக நாமம் நம்பிக்கை கொண்டுள்ளது. உங்கள் குடும்பத்தினரிடையேயும்; கைகளை கழுவுவதற்கு ஊக்குவிப்பதற்கு முன்வர வேண்டும். உங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து விடயங்களும் உங்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.



