சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014

கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்த ஹட்ச்

 

கொமர்ஷல் வங்கியில் கணக்குகளை வைத்திருக்கும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை 24 மணிநேரமும் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயற்றிட்டமொன்றை ஹட்ச் நிறுவனம் - கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.

தமது பாவனையாளர்களுக்கு இச்சேவையை வழங்கும் நோக்கில் ஹட்ச் நிறுவனமும் கொமர்ஷல் வங்கியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்நிகழ்வு கொமர்ஷல் வங்கி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொமர்ஷல் வங்கியின் செயற்பாடுகளுக்கான பிரதி பொது முகாமையாளர் சனத் பண்டாரநாயக்க, ஹட்ச் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்படிக்கை காரணமாக கொமர்ஷல் வங்கியில் கணக்குகளை வைத்திருக்கும் ஹட்ச் பாவனையாளர்களுக்கு நாடு தழுவிய கொமர்ஷல் வங்கிகளில் மின்சார, நீர் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளையும், ஹட்ச் பிற்கொடுப்பனவு பட்டியல்களை செலுத்தவும் றீலோட்  செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 8823 இற்கு எஸ்எம்எஸ்  செய்து தமக்கு தேவையான சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் ஹட்ச் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆனந்த் பிரகாஷ் கருத்து தெரிவிக்கையில்:

'பாவனையாளர்கள் நன்மைகளை வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும். எமது சேவைகளை மேலும் அதிகரித்துக்கொள்வதற்காக இவ்வாறான உடன்படிக்கைகளை எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளோம். உடன்படிக்கைமூலம் எமது பாவனையாளர்களுக்கும் கொமர்ஷல் வங்கிக்கும் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு. வலையமைப்பை விஸ்தரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் நாங்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். இதன்;மூலம் எமது பாவனையார்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க எம்மால் முடிந்துள்ளது' என்று கூறினார்.

கொமர்ஷல் வங்கி செயற்பாடுகளுக்கான பிரதி பொது முகாமையாளர் சனத் பண்டாரநாயக்க கருத்து தெரிவிக்கையில் 'எமது வங்கியானது பாவனையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு அனைத்து கிளைகளுடனும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. ஹட்ச் நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ள இப்புதிய சேவைமூலம் இருசாராரினதும் பாவனையாளர்களே அதிக நன்மைகள் கிடைக்கும். சிறந்த சேவையை பாவனையாளர்களுக்கு வழங்கி அவர்களது நம்பிக்கையை மேலும் அதிகரிக்க முடியும்' என்று கூறினார்.

பட விளக்கம்:
இடமிருந்து : சஞ்சய செனரத் - ஹட்ச் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர், அத்துல திசாநாயக்க- ஹட்ச் விற்பனை பொதுமுகாமையாளர், முபாரக் சதார் - பாவனையாளர் அபிவிருத்தி பிரதி முகாமையாளர், ஆனந்த் பிரகாஷ் - ஹட்ச் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, சனத் பண்டாரநாயக்க – கொமர்ஷல் வங்கி நடவடிக்கைகளுக்கான பிரதி பொதுமுகாமையாளர், ரொஹான் முத்தையா- பிரதான தொடர்பாடல் அதிகாரி, ஹஸ்ரத் முனசிங்க – கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதி பொதுமுகாமையாளர், கிரிஷான் கமகே- தொழில்நுட்ப உதவி பொதுமுமையாளர், பிரதீப் பந்துவன்ச- ஈ பேங்கின் சிரேஷ்ட முகாமையாளர் ஆகியோர் காணப்படுகின்றனர்.

Views: 753

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.