சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014

சிறியவர்கள் மற்றும் பெரியவர்களின் வெற்றி வாய்ப்புடன் செலான் வங்கி 'புது வருடத்தை' கொண்டாடவுள்ளது

செலான் வங்கியானது எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடுமுழுவதும் உள்ள அதன் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதோருக்கான, சிறப்பான ஊக்குவிப்பு மற்றும் பரிசில்களுடன் கொண்டாடவுள்ளது.

பாரம்பரிய கொடுக்கல் வாங்கல் நடைமுறைகளுக்கு அமைய, ஏப்ரல் 02ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை 'செலான் அவுருது தன்பத்து' மற்றும் 'செலான் டிக்கிரி பிளஸ்' கணக்குகளில், பலதரப்பட்ட பரிசுகளை வெல்லும் வாய்ப்புடன், வைப்பு செய்ய சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

செலான் அவுருது தன்பத்து, எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு உகந்ததான விசேடமான 12 மாத வைப்புத் திட்டமாகும். ரூ. 25,000 மற்றும் அதிகமான வைப்புக்கு ஒரு பிளண்டர் பரிசாக வழங்கப்படும்.

பிளண்டருக்கு மேலதிகமாக, 'செலான் அவுருது தன்பத்து'வில் வைப்பிலிடப்படும் ஒவ்வொரு ரூ. 5,000, மே 2012இல் இடம்பெறும் ஏப்ரல் மாதத்துக்கான 'பரிசு மேல் பரிசு' சீட்டிழுப்புக்கும் தகுதிபெறும்.

மேலதிகமாக, டிக்கிரி பிளஸ் கணக்கில் வைப்பிலிடப்படும் ஒவ்வொரு ரூ. 5,000 வைப்பாளருக்கு ஒரு வோக்கி டோக்கியை பெற்றுக் கொடுக்கும். அதேபோல ரூ. 20,000 இற்கு அதிகமான வைப்புகளுக்கு ஒரு விளையாட்டு பேட் வழங்கப்படும்.

செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திலான் விஜேசேகர தெரிவிக்கையில், 'சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, சகல இலங்கையரும் பொதுவான பாரம்பரியம் மற்றும் சந்தோஷமான கொண்டாட்டங்களில் ஒன்றிணையும் ஒரு விசேட தருணமாகும். பரிசுகளை பரிமாறவும் எதிர்காலத்துக்கான சேமிப்புகளை ஆரம்பிக்கவுமான நேரமும் இதுவாகும். அன்புடன் அரவணைக்கும் வங்கியாக, இந்த கொண்டாட்டங்களில் பங்கெடுத்து நாடுமுழுவதுமுள்ள எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்' எனத் தெரிவித்தார்.
Views: 900

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.