HUAWEI Nova3 Series ஊடாக திரைப்படங்களை எடுக்கலாம்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுடைய கமரா தொலைபேசியில் குறும்படங்களை படம்பிடிக்கும் வாய்ப்பு நடைமுறைச் சாத்தியமற்றதாகவே காணப்பட்டது.

எனினும் தொலைபேசி சாதனங்கள் பாரிய அளவில், இன்னும் அதிக வலு கொண்டதாகவும், ஒரு மினி ஊடக மையத்திற்கு இணையாக வெளிவர ஆரம்பித்த பின்னர் தொலைபேசிகளை உபயோகித்து படம்பிடிப்பது குறும் படங்களை தயாரிக்கும் பிரபலமான ஒரு வழிமுறையாக மாறியுள்ளது.   

சமூக ஊடக வலைத்தளங்களில் வீடியோக்கள் மற்றும் மொபைல் குறும்படங்களை பார்க்கும் கலாசாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற நிலையில், அனைவரும் தமது கதைகளையும், சம்பவங்களையும் பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு ஒளிபரப்ப முடிகின்றது.

ஒவ்வொருவரிடம் ஏதாவது ஒரு சுவாரசியமான சம்பவமோ அல்லது கதையோ உள்ள போதும் அவர்கள் அனைவரும் அதியுயர் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருப்பதில்லை அல்லது வீடியோ கமராக்கள் தொடர்பில் ஆழமான தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருப்பதில்லை.

அதிநவீன தொழில்நுட்ப பக்கபலம் மற்றும் அதனுடன் இணைந்து இலகுவாக விளங்கிக் கொள்ளக்கூடிய தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியன திறன்பேசி ஒன்றின் மூலமாக தமது அன்றாட வாழ்வில் விசேட தருணங்களை பதிவு செய்ய விரும்புகின்றவர்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.   

இத்தேவையை உணர்ந்து கொண்ட HUAWEI, தனது சமீபத்தைய மூன்றாம் தலைமுறை Nova சாதனமான, HUAWEI nova3 மற்றும் nova3i ஆகியவற்றை 2018 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தியிருந்தது. 

இது இலங்கையில் மிகுந்த பிரபலமடைந்து வருவதுடன், விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது.   

கமரா விவரக்குறிப்புக்களைப் பொறுத்த வரையில் HUAWEI nova3 ஆனது 24MP + 16MP பின்புற இரட்டை கமரா அமைப்பையும், 24MP + 2MP முன்புற இரட்டை கமரா அமைப்பினையும் கொண்டுள்ளமையால், செயற்கை நுண்ணறிவு அனுபவத்தில் ஒரு புதிய உலகின் புதிய தரஒப்பீட்டு நியமமாக நான்கு-கமரா வலுநிலையத்தைத் தோற்றுவித்துள்ளது. மறுபுறத்தே Nova 3i ஆனது பின்புறத்தில் 16MP + 2MP இரட்டை கமரா அமைப்பையும், முன்புறத்தில் 24MP + 2MP இரட்டை கமரா அமைப்பையும் கொண்டுள்ளது.   

இந்த உற்பத்தி வரிசை கொண்டுள்ள பல மிகச் சிறந்த தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் மத்தியில், மிகச் சிறந்த செயற்கை நுண்ணறிவு செல்ஃவி கமராவைத் தோற்றுவிக்கும் நோக்கத்துடன் nova3 இன் கமராவிற்கு வடிவமைப்பாளர்கள் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

மனித சிந்தனையை விடவும் மிக வேகமாக, திறன்மிக்க மற்றும் துல்லியமான தீர்மானங்களை கணித்து, மேற்கொள்ளும் ஆற்றலை கமராவுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டுள்ளமை அதன் அனுகூலமாகும்.  


HUAWEI Nova3 Series ஊடாக திரைப்படங்களை எடுக்கலாம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.