IASL, MSF நிறுவனங்களின் தலைவர்கள் பார்வையில் காப்புறுதித்துறையின் பங்களிப்பு

 

செப்டெம்பர் 01ஆம் திகதி தேசிய காப்புறுதி தினமாகப் பிரகடனம் செய்தது முதல் காப்புறுதி பற்றிய விளக்கமளிப்பு, கடந்த மாதம் முழுவதும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்வேறுபட்ட காப்புறுதித்துறை சார்ந்த தலைப்புகளில், அவற்றின் முக்கிய கதாபாத்திரங்களையும், நாட்டின் சராசரி ஒரு குடிமகன் காப்புறுதியின் பாதுகாப்பினால் அடையும் நன்மைகள் பற்றியும், இலங்கை காப்புறுதி சங்கத்தின் அதிபர் தீப்தி லொக்குஆரச்சி, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை அமைப்பின் தலைவர் ஹர்ஷ வீரவர்தன ஆகியோர் தங்களது கருத்துக்களை விளக்கிக் கூறியிருந்தனர்.

“தேவைகள் ஆய்வின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் லொக்குஆரச்சி கூறுகையில், “இதுவொரு மிக முக்கியமான அம்சமாகும் என்பதுடன், இதன் மூலம் வாடிக்கையாளரின் தேவைகள் அவர்களின் வாழ்வுக் காலத்திலேயே அடைந்து கொள்ளும் திட்டம் முறையாக அமைத்துக் கொடுக்கப்படுகிறது” என்றும் கூறினார்.

லொக்குஆரச்சி மேலும் கூறுகையில், காப்புறுதி ஆலோசகர்கள், காப்புறுதிப் பத்திரங்களை செயற்பாட்டில் வைத்திருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக - “ஒரு முறை காப்புறுதியைப் பெற்றுக்கொடுத்த பின்னர், காப்புறுதியைத் தொடர்ச்சியாகப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றி காப்புறுதி நிறுவனங்கள் மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது கிடைக்கும் சலுகைகள் மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு ஒன்றின் போது கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக எடுத்துரைக்க வேண்டும். கொடுப்பனவுகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது ஆயுள் காப்புறுதி உரிமையாளர் ஒருவரின் தங்கியிருப்போருக்கு எதிர்பாராத ஒரு நிகழ்வின் போது கிடைக்கும் பாதுகாப்பு பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும். வாழ்க்கை முறையை எந்தவித மாற்றமும் இன்றி எவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் கொண்டு செல்லக்கூடியமை பற்றி விளக்குவதன் மூலம் காப்புறுதியின் முக்கியத்துவத்தை தக்க வைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

“காப்புறுதியின் போது, கட்டணங்களைச் செலுத்துதல் மற்றும் சேமித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றது. காப்புறுதி உரிமையாளரின் சேமிப்பு மற்றும் இடருக்காகச் செலுத்தப்படும் மேலதிகக் கட்டணம் ஆகிய இரண்டையும் இந்தக் கொடுப்பனவு உள்ளடக்குகிறது” சேமிப்பு மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொடுப்பனவு செலுத்துதல் என்பனவற்றுக்கு இடையிலான வித்தியாசம் பற்றிக் கேட்கப்பட்ட போது லொக்குஆரச்சி இவ்வாறு கூறினார்.

IASL இன் அதிபர் தனது கருத்துக்களின் போது, கொடுப்பனவை மேற்கொள்வது என்பது, ஒரு வகையான கட்டாயச் சேமிப்பு போன்றது என்பதை விளக்கமாகக் கூறினார். இது ஆயுள் காப்புறுதி உரிமையாளருக்குக் கிடைக்கக்கூடிய ஒரு நன்மையாகும் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சேமிப்பின் மூலம் கிடைக்கப்பெறாத உயிர் மீதான காப்புக்குரியக் கட்டணங்களின் உள்ளடக்கமும் இதில் அடங்கியுள்ளதாக அவர் விளக்கினார்.

வங்கிச் சேவைகளோடு ஒப்பிடுகையில், இலங்கையில் காப்புறுதித்துறை பற்றிய விளக்கம் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று கேட்கப்பட்ட போது, லொக்குஆரச்சி “இது விளக்கம் பற்றிய ஒரு பிரச்சினை அல்ல. மக்கள் தமது வருமானத்தில் ஒரு பகுதியை எதிர்காலத்துக்காக தொடர்ச்சியாக ஒதுக்குவதில் காட்டும் விருப்பமற்ற தன்மையே முக்கிய காரணமாகும். எதிர்காலத்தில் அசம்பாவிதங்களோ மரணமோ ஏற்படக் கூடும் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாரில்லாது இருப்பதும் இதற்குக் காரணமாகும் என்று கூறினார்.

செப்டெம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகள் பற்றி MSFஇன் தலைவர் ஹர்ஷ வீரவர்தனவிடம் கேட்ட போது, கடந்த மாதம் முழுவதும் நாட்டில் காப்புறுதி பற்றிய விளக்கத்தை அதிகரிப்பதன் நோக்கமே முழுமையாக இருந்தது என்பது தெரிய வந்தது. காப்புறுதி மாதத்தின் செயற்பாடுகள் முதலாவது காப்புறுதி தினத்தை செப்டெம்பர் 01ஆம் திகதி பிரகடனம் செய்தது முதல் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு விசேட முத்திரை ஒன்றும் காகித உறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர நாடு தழுவிய ரீதியில் 16 பகுதிகளில் ஆயுள் காப்புறுதி மற்றும் ஏனைய காப்புறுதிகள் என்ற பிரிவுகளில் விளக்கத்தை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு அனுசரணை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. நீர்கொழும்பு, குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி, கிரிபத்கொட, அம்பாறை. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், பண்டாரவளை, எம்பிலிப்பிட்டிய, கண்டி, காலி மஹரகம மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் பிராந்திய மட்டத்திலானச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“இலங்கை காப்புறுதிச் சபை தேசிய காப்புறுதி ஒழுங்கமைப்பாளர் என்ற ரீதியில் தேவையான வழிகாட்டலையும், உதவிகளையும் பெற்றுக்கொடுத்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் ஆயுள் காப்புறுதி மற்றும் ஆயுள் காப்புறுதி அற்ற காப்புறுதி பிரிவுகளில் விற்பனை ஊழியர்களை சந்தித்து காப்புறுதியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்கிக் கூற உதவியுள்ளன” IBSL நிறுவனத்தின் கதாபாத்திரம் பற்றிக் கேட்ட போது வீரவர்தன இவ்வாறு கூறினார்.

காப்புறுதி நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் பங்கேப்பு பற்றி பெரும் மகிழ்ச்சியடைவதாக வீரவர்தன கூறினார். “சில காப்புறுதி நிறுவனங்களினால் இடங்கள், நிகழ்ச்சிகள் என்பனவற்றை தெரிவு செய்வது தலைமைத்துவத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும் கூட, சகல காப்புறுதி நிறுவனங்களும் இலங்கை மக்களிடையே காப்புறுதியை கொண்டுச் சேர்க்கும் முக்கியத்தை விளங்கி ஒன்றிணைந்த ஒரு செயற்பாடாகப் பணியாற்றியதன் பலனாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட பிராந்திய செயற்பாடுகள் பெருமளவு வெறிறியைக் கண்டுள்ளன.

“செப்டெம்பர் மாதத்தில் முழு இலங்கையையும் உள்ளடக்கியவாறு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் காப்புறுதியின் முக்கியத்துவம் பற்றிய அறிவை கொண்டுச் சேர்க்க IASL எதிர்பார்க்கிறது. இதன் மூலம் வருடத்தின் ஏனைய காலப்பகுதியில் சிறந்த பெறுபேறுகளை அடைந்துகொள்ள காப்புறுதித் துறையினால் முடியும் என்பது எதிர்பார்ப்பாகும். இந்தச் செயற்பாட்டின் மூலம் கிடைக்கும் பின்னணி ‘அனைத்து இலங்கையர்களும் காப்புறுதி பெற்ற ஒரு நாள்’ என்ற இலக்கை அடையும் எதிர்பார்ப்புக்குத் துணை புரியும் என்று நம்புவதாக MSF இன் தலைவர் கூறினார்.

 


IASL, MSF நிறுவனங்களின் தலைவர்கள் பார்வையில் காப்புறுதித்துறையின் பங்களிப்பு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.