One Galle Face கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு

ஷங்கரி-லா குழுமத்தால் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட One Galle Face கோபுரத்தின் பணிகள் திட்டமிட்டபடி முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. பிரத்தியேகமான சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த One Galle Face கோபுரத்தின் தொழிற்பாடுகளை 2019 இன் இரண்டாம் காலாண்டில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

One Galle Face இன் முதன்மையான மற்றும் உயர்ரக பணியிடங்கள் இப்போது வாடகைக்கு கிடைக்கக் கூடியதாகக் காணப்படுவதுடன், வருங்கால குத்தகைக் குடியிருப்பாளர்கள் நகல் வடிவிலான அலுவலக பணியிடத்தை தற்போது பார்வையிட முடியும்.

இரு குத்தகைக் குடியிருப்பாளர்களுடன் கன்னி குத்தகை ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த முதன்மையான வியாபார கேந்திர மையமாக One Galle Face கோபுரம் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  

 

“இந்தக் கட்டடத்தை வந்தடைந்துள்ளமை எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி யை ஏற்படுத்துகின்றது. One Galle Face கோபுரத்தில் தற்போது நகல் வடிவிலான அலுவலக பணியிடத்தை எம்மால் திறந்து காண்பிக்க முடியுமாகவுள்ளது. அனைத்துத் தேவைப்பாடுகளும் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக நாம் ஓய்வின்றி பணியாற்றினோம்.   

அந்த வகையில் One Galle face கோபுரமானது கொழும்பின் வியாபாரம், கூட்டாண்மை மற்றும் வாழ்க்கைமுறைப் போக்கு போன்ற விடயங்களை மேம்படுத்துவதற்கும், மீள வரையறை செய்வதற்கும் அவசியமான வசதிகளை வழங்கும்.   

சர்வதேச அளவிலான நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் முகமாக, எமது குத்தகை தாரர்களுக்கு சொகுசான, சௌகரியமான மற்றும் சிரமமற்ற ஒரு பணி அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் விடயத்தில் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்” என்று ஷங்கரி-லா ஹோட்டல்ஸ் லங்கா (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் செல்வி கேலி யாஹ் தெரிவித்தார். 

One Galle Face அபிவிருத்தித் திட்டமானது நான்கு உப செயற்றிட்டங்களை உள்ளடக்கியதாகும். அதன்படி One Galle Face கடைத் தொகுதி, One Galle Face கோபுரம், One Galle Face இல் வதிவிடங்கள் மற்றும் கொழும்பு ஷங்கரி-லா ஹோட்டல் ஆகியவை இவற்றுள் உள்ளடங்குகின்றன.  

One Galle Face கோபுரம், கொழும்பு எனும் வணிக மாவட்டத்தின் இதயம் போன்ற மையப் பகுதியில் 540,000 சதுர அடி பரப்பளவிலான முதன்மையான அலுவலக இடவசதியை அளிக்கின்றது.

இந்த இடப்பரப்பானது 32 மாடிகளில் அமைந்திருப்பதுடன், உலகளாவிய போக்குகளுக்கு ஒத்திசைவான அதிநவீன வடிவமைப்பு மற்றும் வசதிகளை இது உள்ளடக்கியிருக்கின்றது.    


One Galle Face கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.